அன்புமணி முதல்வராகும் வரை உழைக்க வேண்டும்..பாமகவினருக்கு ராமதாஸ் வேண்டுகோள் !

Posted By:
Subscribe to Oneindia Tamil

புவனகிரி: இளைஞரணி தலைவர் அன்புமணி முதல்வராக பொறுப்பேற்கும் வரை பாமக தொண்டர்கள் தொடர்ந்து உழைக்க வேண்டும் என அக்கட்சியியின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் மேற்கு, தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் புவனகிரியில் உள்ள திருமலை திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

pmk cadres will hard work for anbumani to take charge of cm, says Ramadoss

இந்த கூட்டத்துக்கு மாநில துணை பொதுச்செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் முன்னிலை வகித்தார். கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் வரவேற்று பேசினார்.

பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் முதல்வராகும் வரை பாட்டாளி சொந்தங்கள் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். என்றைக்கு அன்புமணி ராமதாஸ் முதல்வராக பொறுப்பேற்கிறாரோ அதன்பின்னர் தான் பா.ம.க.வினர் ஓய்வு எடுக்க வேண்டும் என்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
PMK cadres will hard work for anbumani to take charge of tamilnadu cm, says party chief Ramadoss
Please Wait while comments are loading...