For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாழ்க பஜனை முன்னேற்றக் கழகம்! கருணாநிதி சமாதியில் ஜால்ரா அடித்து பாடிய திமுகவினரை நக்கலடித்த ராமதாஸ்

மறைந்த தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் திமுகவினர் பஜனை பாடியதை பாமக நிறுவனர் ராமதாஸ் கிண்டலடித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் திமுகவினர் பஜனை பாடியதை பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்க பஜனை முன்னேற்றக் கழகம் என கிண்டலடித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார். அவரது உடல் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது.

அன்றைய தினம் முதலே கருணாநிதியின் குடும்பத்தினர், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இரவு பகலாக தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

எவ வேலு பஜனை

எவ வேலு பஜனை

இந்நிலையில் கருணாநிதி நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர் எவ வேலு நேற்று முன்தினம் ஒரு குழுவுடன் சேர்ந்து பஜனை பாடினார். இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன.

[Read This: எங்கள் தலைவரே..தங்கத் தலைவரே... எ வ வேலு தலைமையில் ஆடி பாடி நினைவஞ்சலி செலுத்திய திமுகவினர்!]

ட்ரோலான பஜனை

ட்ரோலான பஜனை

எவ வேலுவின் எங்கள் தலைவரே.. தங்கத் தலைவரே.. பஜனை அஞ்சலி பலர் இதனை கிண்டலும் செய்தனர். சினிமா பாடலுடன் ரீமிக்ஸ் செய்து இந்த பஜனை கச்சேரி ட்ரோல் செய்யப்பட்டது.

பஜனை முன்னேற்ற கழகம்!

இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் இதனை கிண்டலடித்து டிவிட் செய்துள்ளார். அதில் அவர், இது தான் பெரியார் வழிவந்தவர்களின் பகுத்தறிவுக் கொள்கையோ? வாழ்க பஜனை முன்னேற்றக் கழகம்! என பதிவிட்டுள்ளார்.

ஒரே பதில்தான்

கலைஞர் நினைவிடத்தில் திமுகவின் ஒரு பிரிவினர் பஜனை பாடல்களை இசைத்ததன் நோக்கம் என்ன தெரியுமா? பஜனையில் பயன்படுத்தப்படும் முக்கியமான இசைக்கருவியின் பெயர் என்ன? இரு கேள்விகளுக்கும் ஒரே பதில் தான்! என தெரிவித்துள்ளார் ராமதாஸ்.

English summary
PMK founder Ramadoss making fun of DMK for doing Bajanai in Karunanidhi Memorial. EV Velu did Bajanai in Karunanidhi Memorial day before yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X