For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவிக்கு மறுதேர்வு நடத்துவதை ஏற்க முடியாது: ராமதாஸ்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவிக்கு மறுதேர்வு நடத்துவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

சென்னை : பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு செய்தவர்களை நிராகரிப்பதை விடுத்து, மீண்டும் மறுதேர்வு நடத்துவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள பல்தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு 1058 விரிவுரையாளர்களை தேர்ந்தெடுப்பதற்கானத் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, அத்தேர்வு ரத்து செய்யப்பட்டது செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில், அதை மீறி அப்பணிகளுக்கு மீண்டும் போட்டித்தேர்வு நடத்த அரசு தயாராகி வருகிறது. நேர்மையாக தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்தவர்களின் நலனுக்கு எதிரான இச்செயல் கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 தேர்வில் முறைகேடு

தேர்வில் முறைகேடு

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்தொழில்நுட்பக் கல்லூரிகளின் விரிவுரையாளர் பணிக்கான தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அதற்குக் காரணமானோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதன்முதலில் வலியுறுத்தியது பாட்டாளி மக்கள் கட்சி தான். அடுத்த சில நாட்களிலேயே இத்தேர்வில் நடந்த முறைகேடுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் கண்டுபிடித்து விட்டது. ஒட்டுமொத்தமாக தேர்வு எழுதிய 1.33 லட்சம் மாணவர்களில் 196 மாணவர்களின் மதிப்பெண்கள் மட்டுமே திருத்தப்பட்டிருந்தன.

 தமிழக அரசின் மெத்தனம்

தமிழக அரசின் மெத்தனம்

இதைத் தவிர வேறு முறைகேடுகள் நடக்காத நிலையில், மோசடி செய்தவர்களை மட்டும் தகுதி நீக்கம் செய்து விட்டு, தகுதியானவர்களை நியமிப்பது தான் நியதி. ஆனால், ஒட்டுமொத்த தேர்வையும் ஆசிரியர் தேர்வு வாரியம் ரத்து செய்து விட்டது. இதுமுறையல்ல என்றும், அனைத்து விடைத்தாள்களையும் 12 வாரங்களில் மறு மதிப்பீடு செய்து அதனடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்றும் மதுரை உயர்நீதி மன்றம் ஆணையிட்டது. அதன்பின் 25 நாட்களாகி விட்ட நிலையில், அதை செயல்படுத்துவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் தமிழக அரசும், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வரை மேற்கொள்ளவில்லை.

 தீர்ப்பை மதிக்காத போக்கு

தீர்ப்பை மதிக்காத போக்கு

மாறாக, பல்தொழில் நுட்பக் கல்லூரிகளின் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு வரும் ஆகஸ்ட் 4ம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என்று இம்மாதத் தொடக்கத்தில் அறிவித்த தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், அதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ளத் தொடங்கி யுள்ளது. அடுத்த சில வாரங்களில் இதற்கான அறிவிக்கையை தேர்வு வாரியம் வெளியிட உள்ளது. விரிவுரையாளர் பணிக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டது செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அதை மதிக்காமல் தமிழக அரசு செயல்படுவது எந்த வகையிலும் ஏற்கத்தக்க தல்ல. இது தகுதியான மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும்.

 தேர்வுகளில் முறைகேடு

தேர்வுகளில் முறைகேடு

விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்ததையோ, மீண்டும் அத்தேர்வுகளை நடத்தப் போவதையோ ஆசிரியர் தேர்வு வாரியத்தால் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. போட்டித் தேர்வுகளில் அனைத்து நிலைகளிலும் முறைகேடு நடந்திருந்தால் மட்டும் தான் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய முடியும். மாறாக, ஏதேனும் ஒரே ஒரு கட்டத்தில் மட்டும் முறைகேடு நடந்திருந்தாலோ அல்லது முறைகேடு செய்தவர்களையும், அவ்வாறு செய்யாதவர்களையும் பிரித்துப் பார்க்க முடியும் என்றாலோ தேர்வை ரத்து செய்யத் தேவையில்லை என்று பல்வேறு தருணங்களில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

 வேறு முறைகேடுகள் இல்லை

வேறு முறைகேடுகள் இல்லை

அதனடிப்படையில் தான் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை தீர்ப்பளித்தது. விரிவுரையாளர் தேர்வைப் பொறுத்தவரை, ஒட்டுமொத்தமாக காப்பியடிப்பதோ அல்லது வேறு வகையில் முறைகேடு செய்வதோ நடக்கவில்லை. விடைத்தாள்களும் மாற்றப்படவில்லை. விடைத்தாள்கள் எந்த வகையிலும் சேதப்படுத்தப்படவில்லை. அவை இன்னும் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. விடைத்தாள்களை திருத்துவதில் ஏதேனும் முறைகேடுகள் நடந்ததா? என்றால் அதுவும் இல்லை. அனைத்து விடைத்தாள்களும் முறையாக திருத்தப்பட்டுள்ளன.

 தரவரிசைப்பட்டியலில் மாற்றம்

தரவரிசைப்பட்டியலில் மாற்றம்

அவ்வாறு திருத்தப்பட்ட விடைத்தாள்களின் மதிப்பெண்களை பட்டியலிடும் போது 196 மாணவர்களின் மதிப்பெண்கள் உயர்த்தி பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் ஒவ்வொருவருக்கும் 50 முதல் 100 மதிப்பெண்கள் வரை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன. உதாரணமாக, கணிதப் பாடப்பிரிவில் 27 மதிப்பெண் மட்டுமே எடுத்த ஒருவர் 115 மதிப்பெண் எடுத்ததாக மாற்றம் செய்யப் பட்டுள்ளது. இதன் மூலம் தரவரிசையில் ஆயிரம் இடங்களுக்கும் கீழ் இருந்தவர்கள் முதல் 100 இடங்களுக்குள் கொண்டு வரப்பட்டனர்.

 அநீதியை தடுக்க வேண்டும்

அநீதியை தடுக்க வேண்டும்

மதிப்பெண் உயர்த்தப்பட்ட 196 பேர் யார் என்பதும் அடையாளம் கண்டறியப்பட்டு விட்டது. அவ்வாறு இருக்கும் போது அந்த 196 பேரை நீக்கி விட்டு, மீதமுள்ளவர்களைக் கொண்டு தரவரிசை தயாரித்து அதில் முன்னணியில் உள்ளவர்களுக்கு வேலை வழங்குவது தான் நியாயமானதாகும். அதைத் தான் உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் கூறியுள்ளன. இதை செய்வதற்கு பதிலாக ஒட்டு மொத்த தேர்வையும் ரத்து செய்தால், இத்தேர்வுக்காக இரவு பகலாக படித்து நேர்மையாக தேர்வு எழுதியவர்கள் பாதிக்கப்படுவர். இது நேர்மையை தண்டித்ததாக அமைந்து விடும். இப்படி ஓர் அநீதிக்கு தமிழக அரசு துணைபோகக்கூடாது.

 புதிய தரவரிசைப்பட்டியல்

புதிய தரவரிசைப்பட்டியல்

எனவே, பல்தொழில் நுட்பக்கல்லூரிகளின் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 4ம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் திரும்பப் பெற வேண்டும். உயர்நீதிமன்றம் ஆணையிட்டவாறு விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்து புதிய தரவரிசைப்பட்டியல் தயாரித்து, அதில் முன்னணியில் உள்ளவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலை வழங்க அரசு முன்வர வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
PMK founder Ramadoss Questioning on Polytechnic lecturers. Earlier Madurai Highcourt, asked to review the results were complaint arises that there will be some scam in Coreection Process of the exam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X