For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2ஜி வழக்கின் தீர்ப்பு சர்க்காரியா கமிஷன் அறிக்கையை நினைவுப்படுத்துகிறது : ராமதாஸ் காட்டம்

2ஜி வழக்கின் தீர்ப்பு சர்க்காரியா கமிஷன் அறிக்கையை நினைவுப்படுத்துகிறது என்று ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    2 ஜி வழக்கு- ஆ ராசா, கனிமொழி விடுவிப்பு- வீடியோ

    சென்னை : 2ஜி வழக்கின் தீர்ப்பில் அநீதியான தீர்ப்பு வெளியாகி உள்ளது. இந்த வழக்கில் அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

    நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2ஜி அலைக்கற்றை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகி உள்ளது. இதில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, நாடாளுமன்ற ராஜ்யசபா எம்.பி கனிமொழி ஆகியோரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

    இந்த தீர்ப்பை தி.மு.க.,வினர் உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில், தீர்ப்பு குறித்த விமர்சனத்தை முன்வைத்து உள்ளார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ்.

     2ஜி தீர்ப்பும், சர்க்காரியா கமிஷனும்

    2ஜி தீர்ப்பும், சர்க்காரியா கமிஷனும்

    இது குறித்து அவர் கூறுகையில், 2ஜி வழக்கில் முறைக்கேடு நடந்ததற்காக போதிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் எதிர்த்தரப்பு சமர்பிக்கவில்லை என்று நீதிபதி கூறி இருப்பது தனக்கு சர்க்காரியா கமிஷனின் அறிக்கையை நினைவுபடுத்துவதாக அவர் குறிப்பிட்டு உள்ளார்.

     அநீதி எப்போதும் வெற்றி பெறாது

    அநீதி எப்போதும் வெற்றி பெறாது

    மேலும், இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்து உள்ளார். விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்தால் நிரூபிக்க முடியாது என்று தெரிந்தே இதை சிலர் செய்து இருக்கின்றனர். இன்று அநீதி வெற்றி பெற்று உள்ளது. ஆனால் அநீதியும், ஊழலும் இன்றைப் போல எப்போதும் வெற்றி பெறாது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

    ட்விட்டரில் கேள்வி

    இந்த தீர்ப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடக்கவில்லை என்றால், அனைத்து 122 ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு உரிமங்களையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது ஏன்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

    ஏலமுறையில் மாற்றம் ஏன்?

    மேலும், எந்த ஊழலும் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடக்கவில்லை என்றால், ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட அனைத்து இயற்கை வளங்கள் ஒதுக்கீட்டை ஏலமுறைக்கு மத்திய அரசு மாற்றம் செய்தது ஏன்? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார் ராமதாஸ்.

    English summary
    PMK Founder Ramadoss Slams DMK and Congress on the 2G Scam Verdict. He also added that the Government should go appeal on the verdict for higher court.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X