• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் - டாக்டர் ராமதாஸ் கோரிக்கை

|

சென்னை: மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டப்பட வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை விமான நிலையத்திற்கு விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இக்கோரிக்கையை மத்திய அரசு இதுவரை நிறைவேற்றாதது மிகுந்த வருத்தமும் ஏமாற்றமும் தருகிறது.

PMK founder ramadoss states about madurai airport name change

மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்கள், அரசு கட்டிடங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றுக்கு புகழ் பெற்ற தலைவர்களின் பெயர்களை சூட்டுவது வழக்கமான நடைமுறையாக உள்ளது. அந்த வகையில் மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை 25 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இக்கோரிக்கையை நான் பலமுறை வலியுறுத்தியுள்ளேன். ஆனால், ஏனோ இதை ஏற்பதை மத்திய, மாநில அரசுகள் தாமதப்படுத்துகின்றன. இதற்கான காரணத்தையும் புரிந்து கொள்ள முடியவில்லை.

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயர் சூட்டப்படுவது அனைத்து வகைகளிலும் பொருத்தமானதாக இருக்கும். தேச விடுதலைக்கு போராடிய நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பியதில் தொடங்கி தலித்துகளின் ஆலய நுழைவுக்கு உதவியது, நிலம் வழங்கியது என பல நன்மைகளை செய்துள்ளார்.

அவரது சிறப்பை போற்றும் வகையில் தான் ஆண்டு தோறும் தேவர் குருபூஜை அரசு நிகழ்வாக நடத்தப்பட்டு வருகிறது. அனைத்துக் கட்சித் தலைவர்களும் தேவர் திருமகனாரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகின்றனர். இவ்வாறு அனைத்துத் தரப்பினராலும் போற்றப்படும் தலைவரின் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்டுவதில் என்ன தடை இருக்க முடியும்? எனத் தெரியவில்லை.

நாடாளுமன்றத்திலும் இந்த கோரிக்கை எழுப்பப்பட்டதன் பயனாக மதுரை விமான நிலையத்திற்கு தேவர் திருமகனாரின் பெயரைச் சூட்டுவதற்கு கடந்த 2001 ஆம் ஆண்டில் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு ஒப்புக்கொண்டது. அப்போதைய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரும், எனது நண்பருமான சரத் யாதவ் நாடாளுமன்றத்திலேயே இதற்கான வாக்குறுதியை அளித்தார். ஆனால், அப்போதைய அ.தி.மு.க அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தான் மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயர் சூட்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டிருப்பதாக தெரிகிறது.

தேச விடுதலைக்கு பங்களித்த ஒரு தலைவருக்கு உரிய மரியாதை செலுத்த வேண்டியது அரசின் கடமை. எனவே, மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரைச் சூட்ட மத்திய அரசு முன்வர வேண்டும். பசும்பொன் பெருமகனாரின் 108 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் 53 ஆவது குருபூஜை வரும் அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் அன்று இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். தமிழக சட்டப்பேரவையின் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இந்த கோரிக்கையை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

நேற்று பாமகவின் பாண்டிய மண்டல மாநாடு மதுரையில் நடந்தது. அதில் மதுரை தொடர்பான பிரச்சினைகள் குறித்து ராமதாஸ் பேசியிருந்தார். இந்த நிலையில் தற்போது மதுரை விமான நிலையத்தின் பெயர் தொடர்பாக அறிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாகும். சுப்பிரமணிய சாமியும் கூட இதற்காக முயற்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
PMK founder Ramadoss says that Madurai airport must renamed as Pasumpon muthuramalinga devar, in his statement.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more