For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"அன்புமணி பார் சேஞ்ச்"…. களம் இறக்கப்பட்டது பாமகவின் செல்போன் "ஆப்ஸ்"

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ‘அன்புமணி பார் சேஞ்ச்' என்ற பெயரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மொபைல் அப்ளிகேஷன் துவங்கப்பட்டுள்ளது. இதனை பாமகவின் முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிமுகம் செய்து வைத்தார்.

இணைய தளங்களில் வாக்காளர்களை அட்டாக் செய்த அரசியல் கட்சியினர் இப்போது செல்போனில் தங்களின் கட்சி, கொள்கைகள் செயல்பாடுகளை பரப்பி வருகின்றன.

ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களுக்கான ஆப்களை அறிமுகப்படுத்தியவண்ணம் உள்ளன். இந்த வகையில் பாமகவின் ஆப்ஸ் வெளியாகியுள்ளது.

"கேப்டன் செயலி"

2016 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள செல்போனை முக்கிய ஆயுதமாக அரசியல் கட்சியினர் கையில் எடுத்துள்ளனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பிறந்தநாளை முன்னிட்டு ‘CAPTAIN' என்ற செயலியை தொடங்கியுள்ளார். இதன் மூலம் தேமுதிகவின் கொள்கைகளைப் பரப்பி வருகிறார்.

மு.க.ஸ்டாலின் செயலி

மு.க.ஸ்டாலின் செயலி

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனக்கென்று ‘M.K.Stalin' என்ற செல்போன் செயலியை சமீபத்தில் தொடங்கியுள்ளார். தொடங்கியுள்ளார். இது ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், வின்டோஸ் ஆகிய இயங்கு தளங்களில் செயல்படும். இதன் மூலம் பொதுமக்கள், அவர்களது தொகுதியிலும், மாநில அளவிலும் உள்ள பிரச்சினைகளை எனது கவனத்துக்கு கொண்டு வரலாம் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

அன்புமணி செயலி

அன்புமணி செயலி

இதேபோல பாட்டாளி மக்கள் கட்சியும் ‘Anbumani for Change' என்ற செயலியை செல்போனில் தொடங்கியுள்ளது. ஏற்கனவே மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்று போஸ்டர் ஒட்டிய பாமக அதேபோல செயலியை அறிமுகம் செய்துள்ளது.

வித்தியாசமான செயலி

வித்தியாசமான செயலி

இதனைத் தொடக்கி வைத்துப் பேசிய பாமக முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி, திமுக, தேமுதிக அப்ளிகேஷன்களை விட பாமக.,வின் அப்ளிகேஷன் வித்தியாசமானது. பாமக.,வின் இணையதள தொண்டர்கள் இந்த அப்ளிகேஷனை நிர்வகிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

English summary
Pattali Makkal katchi mobile phone apps Anbumani for Change.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X