For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீட் கிடைக்காததால் பாமகவில் இணைந்த காங். பிரமுகர்! சிதம்பரம் தொகுதி வேட்பாளராகிறார்?

By Mathi
|

சென்னை: சிதம்பரம் லோக்சபா தொகுதியில் சீட் கிடைக்காததால் காங்கிரஸ் பிரமுகர் மணிரத்னம் திடீரென பாட்டாளி மக்கள் கட்சியில் இன்று இணைந்தார்.

சிதம்பரம் லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட மணிரத்னம் கேட்டிருந்தார். ஆனால் வள்ளல்பெருமாளுக்கு காங்கிரஸ் கட்சி சீட் வழங்கியது.

இதில் அதிருப்தி அடைந்த மணிரத்னம், தமது ஆதரவாளர்களை சென்னைக்கு அனுப்பி வைத்து சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிடச் செய்தார். நூற்றுக்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் சென்னையில் போராட்டம் நடத்தினர்.

ஆனால் சிதம்பரம் தொகுதி வேட்பாளர் மாற்றப்படுவதாக தெரியவில்லை. இதனைத் தொடர்ந்து இன்று வன்னியர்

PMK may replace Chidambaram candidate?

சங்கத் தலைவர் காடுவெட்டி குருவை நேரில் சந்தித்த மணிரத்னம் பாமகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

சிதம்பரம் வேட்பாளர் மாற்றம்?

பாட்டாளி மக்கள் கட்சியில் மணிரத்னம் இணைந்துள்ள நிலையில் அக்கட்சியின் சிதம்பரம் தொகுதி வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்று தெரிகிறது.

சிதம்பரம் தொகுதியில் பா..ம.க.வின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் மணிரத்னம் அறிவிக்கப்பட்டு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தற்போது மணிரத்னம் வேட்பாளராகக் கூடும் என பாமக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

English summary
Pattali Makkal Katchi may to replace its Chidambaram Candidate Gopalakrishnan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X