For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பால் விலை உயர்வைக் கண்டித்து பா.ம.க போராட்டம்!

Google Oneindia Tamil News

கரூர்: தமிழக அரசு ஏற்றிய பால்விலையை திரும்ப பெற வலியுறுத்தி கருரில் பா.ம.க சார்பில் கொட்டும் மழையயும் பொருட்படுத்தாமல் நடைபெற்ற போரட்டத்தில் பெண்கள் உட்பட சுமார் 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தமிழக அரசு அண்மையில் உயர்த்திய பால் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் , மின் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கரூர் வட்டாசியர் அலுவலகம் முன்பு அக்கட்சியின் மாநில துணை பொது செயலாளர் பா.மா.க.பாஸ்கரன் தலைமையில் தலைமையில் நடைபெற்றது.

PMK protest against milk price hike…

இந்நிகழ்வில் கரூர் நகர செயலாளர் ராக்கிமுருகேசன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய பொருப்பாளர்கள் மகளிர் அணியினர் மற்றும் தொண்டர்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசு மற்றும் மத்திய அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர் .

பின்னர் இது குறித்து மாநில துணை பொது செயலாளர் பா.மா.க.பாஸ்கரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, " பாலில் உள்ள சத்துகளை எல்லாம் மதிப்புகூட்டபட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்தும் பால் கொள்முதல் செய்த விலைக்கே பொதுமக்களுக்கு வழங்க முடியும்.

ஆவின் பால் முறைகேட்டை திசை திருப்பவே தற்போது தமிழக அரசு பால் விலையை ஏற்றியதை திரும்ப பெற வேண்டும் என்ற அவர் மின்கட்டனத்தை குறைக்க வேண்டும் என்றும் இலங்கை தமிழர் விவகாரத்தை நாடகமாடும் இலங்கை அரசின் போக்கை கண்டித்து தமிழர்களை இந்திய அரசு மீட்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

English summary
Karur PMK volunteers and ladies were done a protest against milk price hike in rain.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X