For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாமக பந்த் எதிரொலி: பல்வேறு மாவட்டங்களில் அரசு பேருந்து கண்ணாடிகள் உடைப்பு - கல்வீச்சு

பந்த் காரணமாக அரசு பேருந்துகள் கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டன.

Google Oneindia Tamil News

Recommended Video

    காவிரி வாரியத்திற்காக பாமக சார்பில் முழுஅடைப்பு...வீடியோ

    வேலூர்: மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக நடத்தி வரும் முழுஅடைப்பு போராட்டம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டதால் பதட்டம் நிலவி வருகிறது.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாமக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. முழு அடைப்பு காரணமாக பல மாவட்டங்களில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

    PMK Shutdown today for Cauvery issue

    இந்த முழு அடைப்புக்கு புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் தனது முழு ஆதரவினை தெரிவித்துள்ளது. இதனால் புதுச்சேரியில் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. அதேபோல கடைகளும் பெரும்பாலும் அடைக்கப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் முழு அடைப்பு காரணமாக தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இந்நிலையில் குடியாத்தத்தில் தனியார் பேருந்து மீது மர்மநபர் கல்வீசியுள்ளார். கண்ணாடி உடைப்பால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

    தருமபுரி மாவட்டம் பொன்னகரம் பகுதியில் 4 பேருந்துகளின் மீது கற்கள் வீசப்பட்டன. இதில் பேருந்துகளின் கண்ணாடி சுக்குநூறாக உடைந்தன. இதனால் அந்தயே களேபரமாக காட்சியளித்தன.

    அதேபோல, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் அரசுப்பேருந்து இயக்கப்படுவதை கண்டித்து மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். மர்மநபர்கள் கல்வீசி தாக்கியதில் அரசுப்பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதனால் வந்தவாசியில் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

    குடியாத்தத்தில் தனியார் பேருந்து மீது மர்மநபர் கல்வீசியுள்ளார். கண்ணாடி உடைப்பால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் முழு அடைப்பு முழுமையாக உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடவில்லை. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அரசு பேருந்துகள் மட்டுமே குறைந்த அளவில் ஓடிக் கொண்டுள்ளன. சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அதேபோல, மதுராந்தகத்திலும் 100 சதவீதம் கடையடைப்பு நடைபெற்று வருகிறது.

    தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் முழு அடைப்பு காரணமாக தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

    English summary
    Private buses are not operated due to PMK bunth in most districts in Tamil Nadu. The owner of the municipality was stabbed on private bus in Gudiyatham. Stones are scattered in the area. The stones were thrown on 4 buses in Ponnagar area in Thurumapuri district. The Kalvacey attack was held to protest against the government run in Tiruvannamalai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X