For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வட மாவட்டங்களில் திராவிட கட்சிகளுக்கு திகிலை ஏற்படுத்தும் பாமக: ஜூவி கருத்துக்கணிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: வன்னியர் சமூதாயம் அதிகம் உள்ள வட மாவட்டங்களில் திமுக, அதிமுக ஆகிய திராவிட கட்சிகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சி கடுமையான போட்டியை கொடுக்கும் என்று ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு கூறியுள்ளது.

சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கப் போவது திமுகவா? அதிமுகவா? என்ற விவாதங்கள் ஒரு பக்கம் நடந்தாலும் மாற்றம் முன்னேற்றம் என்று கூறி முதல்வர் வேட்பாளராக அறிவித்து விட்டு 234 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கும் பாமகவின் வெற்றி வாய்ப்பு எப்படி என்பது பற்றியும் விவாதிக்கப்படுகிறது.

234 தொகுதிகளில் அதிமுக போட்டியிட்டாலும் தென் மாவட்டங்களில் பாமகவிற்கு வாக்கு வங்கி குறைவாகவே உள்ளது. கட்சியின் கட்டமைப்பு எல்லாம் வன்னியர் சமூகம் அதிகம் உள்ள வட மாவட்டங்களில்தான் என்று இந்த கருத்துக்கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.

PMK strong in Vanniyar belt North district

சென்னை, காஞ்சியில், தெற்கு, மேற்கு மண்டலங்களில் பாமகவிற்கு 1% முதல் 5% வாக்குகள் மட்டுமே உள்ளது. மேற்கு மண்டலங்களில்வன்னியர்கள் வசிக்கும் ஒரு சில தொகுதிகளில் 12 சதவிகித வாக்காளர்களின்ஆதரவும் உள்ளது.

திருவள்ளூரில் 5 முதல் 10 சதவிகிதம் வரையிலான ஆதரவு பாமகவிற்கு உள்ளது.

பாமகவிற்கு 15 சதவிகிதம் வாக்காளர்களுக்கு மேல் ஆதரவு உள்ள தொகுதிகள்:

பென்னாகரம் 30 சதவிகிதம்
மேட்டூர் - 29 சதவிகிதம்
தருமபுரி - 28 சதவிகிதம்
பாலக்கோடு - 27 சதவிகிதம்
பாப்பிரெட்டிபட்டி, அரூர் ( தனி), 25 சதவிகிதம்
மயிலம் - 22 சதவிகிதம்
செஞ்சி, ஆற்காடு - 18 சதவிகிதம்
கலசப்பாக்கம், அணைக்கட்டு - 17 சதவிகிதம்
ஆரணி, செய்யாறு, செங்கம் (தனி), மன்னார்குடி, - 15 சதவிகிதம்

முதல்வர் வேட்பாளராக போட்டியிடும் அன்புமணி வெற்றி பெறுவார் என்று ஜூனியர் விகடன் கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. 15 சதவிகிதத்தில் இருந்து 20 சதவிகிதம் வரை ஆதரவு உள்ள தொகுதிகளில் திராவிட கட்சிகளுக்கு பாமக கடுமையான சவாலாகவே உள்ளது.

பாமகவிற்கு 25 சதவிகிதத்திற்கு மேல் ஆதரவு உள்ள தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு கிட்டுமா என்பது திராவிட கட்சிகளுக்கு சற்று திகிலாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

English summary
Both the Dravidian parties tough fight for PMK in Vanniyar belt starting in the North district constituencies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X