For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இருமுறை சிறை சென்ற ஜெயலலிதா தெய்வமாக பூஜிக்கப்பட வேண்டியவரா? பழ.கருப்பையா கேள்வி

போயஸ் கார்டன் எனும் கோவிலில் தெய்வமாக பூஜிக்கப்பட வேண்டிய ஜெயலலிதா இரு முறை சிறை சென்றவர் ஜெயலலிதா என்று முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: போயஸ் கார்டனை கோவில் என கூறுவோருக்கு அதில் தெய்வமாக பூஜிக்கப்பட வேண்டிய ஜெயலலிதா இரு முறை சிறைக்கு சென்றவர் என்பதை நினைவுபடுத்துகிறேன் என்று சென்னை துறைமுகம் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.

வருமான வரித் துறை ரெய்டு குறித்து சன் நியூஸ் சேனலுக்கு முன்னாள் எம்எல்ஏ பழ கருப்பையைா கூறுகையில், போயஸ் கார்டன் ஜெயலலிதா வசித்த இடம் மட்டும் அல்ல. தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் வசூல் செய்யப்பட்ட பணம் போயஸ் கார்டனில் வைக்கப்பட்ட வசூல் மையமாகவும் அது திகழ்ந்தது.

சசிகலா, இளவரசி உள்ளிட்டோரை அந்த வீட்டில் எதற்காக வைத்திருந்தார். போயஸ் கார்டன் என்ன சத்திரமா. அன்னியர்களான இவர்களை எல்லாம் ஏன் தன்னுடனேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற கேள்வியை பெங்களூர் நீதிபதி குன்ஹா எழுப்பினார்.

 ஆட்சியில் இருந்தது ஜெ.தான்

ஆட்சியில் இருந்தது ஜெ.தான்

ரூ.2.5 லட்சம் கோடி பணம் சசிகலாவின் கைக்கு வருவதற்கு காரணம் ஜெயலலிதாதான். இவர்தான் ஆட்சியில் இருந்தவர். ஜெயலலிதா இறந்தவுடன் அந்த பணம் முழுவதும் சசிகலா குடும்பத்தினரிடம் போய் சேர்ந்தது. ஒரு முதலமைச்சர் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக இரு முறை சிறை தண்டனை விதிக்கப்பட்டவர் ஜெயலலிதாதான். இன்றைக்கு ஜெயலலிதா இருந்திருந்தால் அவர் பெங்களூர் சிறையில் இருக்க நேரிடும் நிலையில் ஓபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸும் அவருக்கு துரோகம் செய்திருப்பார்கள். 5 ஆண்டு காலம் ஆட்சியை நிறைவு செய்ய அவர்களுக்கு பிரதமர் மோடியின் தயவு தேவை.

 ஊழல் குற்றச்சாட்டு

ஊழல் குற்றச்சாட்டு

போயஸ் கார்டன் கோயிலாக இருந்தால் அங்கு பணத்தை பதுக்கக் கூடாது. கோயிலில் தெய்வமாக பூஜிக்கப்பட வேண்டியவர் ஊழல் குற்றச்சாட்டில் இரு முறை சிறை சென்றுள்ளார். இது நிர்வாகிகளின் அறியாமையையே காட்டுகிறது. தமிழ்நாட்டு அரசியல் இப்படி வளர்க்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு கூட்டம் நெறிப்படுத்தப்பட்டிருக்கிறது.

 தலைமை செயலகத்தில்...

தலைமை செயலகத்தில்...

சசிகலாவின் கட்டுப்பாட்டில்தான் இன்றும் போயஸ் கார்டன் இருப்பதால் அங்கும் ஏதாவது கிடைக்கும் என்பதால் சோதனை நடைபெற்றது. இரு முறை ஊழல் குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டு குற்றமும் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இவர்களுக்கெல்லாம் கோயிலையும் தெய்வதையும் தெரியவில்லை. ஜெயலலிதாவின் முதன்மை செயலாளர் ராம்மோகனராவ் இருந்தபோது தலைமை செயலகத்தில் ரெய்டு நடைபெற்றது. அங்கு பணம் பதுக்கல் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ரெய்டு நடைபெற்றது போது போயஸ் கார்டனில் நடந்தால் என்ன?

 ரெய்டு நடத்த காரணம்

ரெய்டு நடத்த காரணம்

இந்த ரெய்டுக்கு முழு காரணம் மோடிதான். எடப்பாடி பழனிச்சாமி சொல்வதை எல்லாம் மோடி கேட்கமாட்டார். மோடி சொல்வதைத்தான் இவர் கேட்க வேண்டும். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அதிமுகவில் இரண்டாம் இடத்தில் உள்ள தலைவர்கள் என எல்லார் வீட்டிலும் ரெய்டு நடத்த வேண்டும்.

 மோடியின் செயல் சரிதான்

மோடியின் செயல் சரிதான்

சசிகலாவின் உறவினர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தியது சரி. எடப்பாடி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தின் வீடுகளிலும் ரெய்டு நடத்தப்படாதது ஏன் என்பதுதான் என்னுடைய கேள்வி. சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள், ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தில் சோதனை நடத்த உத்தரவிட்ட மோடியின் செயல் சரிதான். ஆனால் பாகுபாடு இல்லாமல் எல்லாரிடத்திலும் எடுக்க வேண்டும்.

English summary
EX MLA Pazha Karuppaiah says that the God of Poes Garden temple was 2 times sent to Prison for corruption case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X