For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதுச்சேரி தொடர் ஏடிஎம் கொள்ளையில் திருப்பம்.. நூதனமாக திருடிய மருத்துவர் விவேக் அதிரடி கைது

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஏடிஎம் கொள்ளையில் திருப்பம்.. நூதனமாக திருடிய மருத்துவர் விவேக் அதிரடி கைது

    புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த தொடர் ஏடிஎம் கொள்ளையில் தற்போது நான்கு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    கடந்த சில மாதங்களாக புதுச்சேரியில் பிரபல வங்கி கிளைகளின் ஏடிஎம்களில் பணம் எடுப்பவர்களின் கணக்கில் இருந்து பணம் கொஞ்சம் கொஞ்சமாக மாயமாகி வந்தது. அவர்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்காமலே பணம் எடுத்ததாக மெசேஜ் சென்று இருக்கிறது. 5 லட்சத்திற்கும் அதிகமாக இப்படி பணம் திருட்டு போய் உள்ளது.

    Police arrest a government hospital doctor in Puducherry ATM robbery case

    விசாரணையின் முதற்கட்டமாக, ஸ்கிம்மர் கருவி மூலம், ஏடிஎம் தகவல்கள் திருடப்பட்ட போலி ஏடிஎம் அட்டைகள் உருவாக்கப்பட்டு, பின் பணம் திருடப்படுவதை போலீஸ் கண்டுபிடித்தது. ஆனால் யார் இப்படி பணம் திருடுகிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறியது.

    இதையடுத்து பணம் திருட்டுத்தனமாக எடுக்கப்படும் நேரத்தையும், ஏடிஎம் சிசிடிவி பதிவுகளையும் வைத்து நான்கு பேருக்கு போலீஸ் வலைவிரித்தது. இந்த நிலையில் தற்போது புதுச்சேரி அரசு மருத்துவமனையில் மருத்துவராக இருக்கும் விவேக் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

    இவர் அங்கு ஒப்பந்த மருத்துவராக இருக்கிறார். இவருக்கு உதவியாக சென்னையில் இருந்து ராஜேஷ் என்பவர் புதுச்சேரி சென்றுள்ளார். ராஜேஷ் பணம் திருட வசதியா விவேக்தான் ஸ்கிம்மர் கருவிகளை வாங்கி கொடுத்துள்ளார். திருட்டில் 70 சதவிகித பணம் விவேக்கிற்கு சென்றுவிடும், மீதம் ராஜேஷுக்கு செல்லும் என்று கூறப்படுகிறது.

    போலீஸ் தற்போது விவேக்கிடம் இருந்து 4 லட்சம் ரூபாயை கைப்பற்றியுள்ளது. இதில் தொடர்புடைய இன்னும் சிலரை தேடி வருகிறது.

    English summary
    Police arrest a government hospital doctor named Vivek in Puducherry ATM robbery case. They have sized nearly 4 lakh from Vivek.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X