For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை விருகம்பாக்கம் ஐஓபி வங்கி கொள்ளை- மேலும் 2 பேர் கைது

சென்னை விருகம்பாக்கம் ஐஓபி வங்கியில் நடைபெற்ற வங்கிக் கொள்ளையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை விருகம்பாக்கம் வங்கி கொள்ளையர்கள் இருவர் கைது- வீடியோ

    சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஐஓபி வங்கியில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவரை பெங்களூரில் வைத்து தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

    விருகம்பாக்கத்தில் ஆற்காடு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை உள்ளது. இங்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஊழியர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்தனர்.

    அப்போது வங்கியின் சுவரில் துளையிடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வங்கியில் இருந்த 2 லாக்கர்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 35 லட்சமாகும்.

    சிசிடிவி காட்சிகள்

    சிசிடிவி காட்சிகள்

    இந்த சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    லாக்கர் உடைப்பு

    லாக்கர் உடைப்பு

    கொள்ளையர்கள் கேஸ் சிலிண்டர் கட்டர் வைத்து வெல்டிங் செய்துவிட்டு முதல் தளத்திலிருந்து லாக்கர் அறைகள் இருக்கும் இடத்துக்கு சென்று லாக்கரை கொள்ளையடித்தது தெரியவந்தது.

    சபிலால் கைது

    சபிலால் கைது

    இந்நிலையில் கொள்ளையடிக்க சிலிண்டர் கொடுத்து உதவிய இருவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவர்கள் ஹிலாராம், ஹர்பகதூர் என்றும் நேபாளத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது. வங்கிக் கொள்ளையில் முக்கிய குற்றவாளி சபிலால் ஏற்கெனவே கைது செய்யப்பட்டார்.

    சென்னைக்கு அழைத்து வர நடவடிக்கை

    சென்னைக்கு அழைத்து வர நடவடிக்கை

    இந்நிலையில் பெங்களூரில் பதுங்கியிருந்த பகதூர், பிரதாப் ஆகியோரை இன்று தனிப்படை போலீஸ் கைது செய்தது. அவர்களை சென்னைக்கு அழைத்து வரும் பணிகளில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

    English summary
    Special team of Police arrests 2 more accused related to Chennai Virugambakkam IOB bank robbery.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X