For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரு கொலை குற்றவாளியை போல் என்னை கைது செய்தார்கள்.. நக்கீரன் கோபால் பரபரப்பு பேட்டி!

ஒரு கொலை குற்றவாளியை போல் என்னை கைது செய்தார்கள் என நக்கீரன் ஆசிரியர் கோபால் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    அனைவருக்கும் நன்றி -நக்கீரன் கோபால்- வீடியோ

    சென்னை: ஒரு கொலை குற்றவாளியை போல் என்னை கைது செய்தார்கள் என நக்கீரன் ஆசிரியர் கோபால் தெரிவித்துள்ளார்.

    நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். ஏப்ரல் மாதம் நக்கீரன் இதழில் ஆளுநர் குறித்து அவதூறு செய்தி வெளியிட்டு அவரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக பதிவு செய்யப்பட்ட புகாரில் நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டார்.

    அவர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் நக்கீரன். அப்போது ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்தார் என்ற குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை என கூறிய நீதிபதி கோபிநாத், நக்கீரன் கோபாலை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி சிறையில் அடைக்க கோரிய அரசு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டார்.

    [ குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி.. நக்கீரன் கோபால் உருக்கம் ]

    சிறையில் அடைக்க முடியாது

    சிறையில் அடைக்க முடியாது

    அடிப்படை ஆதாரமற்ற வகையில் கோபால் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக நீதிபதி கூறினார். எனவே கோபாலை சிறையில் அடைக்க வேண்டும் என்ற வாதத்தை ஏற்க முடியாது என நீதிபதி திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

    அனைவருக்கும் நன்றி

    அனைவருக்கும் நன்றி

    இதைத்தொடர்ந்து விடுவிக்கப்பட்ட நக்கீரன் ஆசிரியர் கோபால், நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, கருத்து சுதந்திரத்தின் பக்கம் நீதித்துறை நின்றுள்ளது.

    எதற்கு கைது என தெரியாது

    எதற்கு கைது என தெரியாது

    காவல்துறை என்னை கைது செய்த போது காரணம் ஏதும் கூறவில்லை. செல்போனை பறித்து கொண்டனர். விமான நிலையத்தில் எதற்காக கைது செய்தார்கள் என்றே எனக்கு தெரியாது

    கொலை குற்றவாளியை போல்

    கொலை குற்றவாளியை போல்

    எழும்பூர் நீதிமன்றம் வந்த பிறகுதான் என்ன வழக்கிற்காக கைது செய்தார்கள் என்றே எனக்கு தெரிந்தது. ஒரு கொலைக் குற்றவாளியை கைது செய்வது போல் என்னை கைது செய்தார்கள்.

    நக்கீரன் பணி தொடரும்

    நக்கீரன் பணி தொடரும்

    புலனாய்வு செய்து வெளியிடும் 'நக்கீரன்' பணி தொடரும். செய்தியில் ஆட்சேபம் இருந்திருந்தால் மறுப்பு தெரிவித்து இருக்கலாம். இவ்வாறு நக்கீரன் கோபால் விடுதலைக்குப் பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    English summary
    Nakkheeran Editor Gopal has met press in Egmore court. He said Police arrested me like a killer.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X