For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதல்வர் குறித்து அவதூறு பேச்சு: அதிகாலையில் கைது செய்யப்பட்டார் கருணாஸ்

எம்எல்ஏ கருணாஸை போலீசார் இன்று கைது செய்தனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கருணாஸ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட காட்சிகள்- வீடியோ

    சென்னை: நடிகர் கருணாஸை போலீசார் இன்று காலை கைது செய்தனர்.

    கடந்த 16-ம் தேதி முக்குலத்தோர் புலிப்படையன் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய திருவாடானை எம்எல்ஏ கருணாஸ், முதலமைச்சரை மிரட்டும் தொணியில் பேசியிருந்தார். அத்துடன், காவல்துறை அதிகாரி ஒருவரிடமும் சவால் விடும் தொனியில் பேசியிருந்தார்.

    கைது செய்ய கோரிக்கை

    கைது செய்ய கோரிக்கை

    முதலமைச்சர், மற்றும் காவல்துறை அதிகாரி என இருவர் மீதும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது கண்டனங்களை தெரிவித்து, கருணாஸை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர்.

    8 பிரிவுகள் பதிவு

    இதையடுத்து கூட்டுசதி, வன்முறையை தூண்டிவிடுதல், கொலைமிரட்டல் விடுத்தல், பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அவதூறாக பேசியது உள்ளட்ட 8 பிரிவுகளின் கீழ் வள்ளுவர் கோட்டம் போலீசார் கருணாஸ் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    3 தனிப்படைகள் அமைப்பு

    3 தனிப்படைகள் அமைப்பு

    இதனால் கைது செய்யவும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் கருணாஸ் தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் பரவியதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ் தான் எங்கும் தலைமறைவாகவில்லை என்றும், வீட்டில்தான் இருப்பதாகவும் விளக்கம் அளித்திருந்தார்.

    சட்டம் கடமையை செய்யும்

    சட்டம் கடமையை செய்யும்

    கருணாஸ் கைது செய்வது தொடர்பாக நேற்றிரவு சென்னை விமான நிலையத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், சட்டம் தன் கடமையை செய்யும் என்றார்.

    போலீசார் குவிப்பு

    போலீசார் குவிப்பு

    இந்நிலையில், இன்று காலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள கருணாஸ் வீட்டில், நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டியன் தலைமையில் போலீசார் அவரை கைது செய்தனர். தற்போது கருணாஸ் வீடு முன்பாக பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    English summary
    Police Arrested MLA Karunas at his Saligramam house
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X