For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மெரீனாவில் மட்டும் தொடர்கிறது ஜல்லிக்கட்டு போராட்டம் Live

Google Oneindia Tamil News

சென்னை: அமைதி வழியில் நடந்து வரும் ஜல்லிக்கட்டு புரட்சிசப் போராட்டத்தை போலீஸார் அடக்குமுறை மூலம் ஒடுக்க முயல்வதால் தமிழகமே கொந்தளித்துக் காணப்படுகிறது.

-சென்னையில் இயல்பு நிலை திரும்புகிறது

-சென்னையில் இயல்பு நிலை திரும்புகிறது

-கலவரம் நடந்த பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு கலவரம் நடந்த பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு

-தீயசக்திகள் போராட்டத்தை திசை மாற்றினர் - கமிஷனர்

-8 இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன - கமிஷனர்

-94 காவல்துறையினர் காயமடைந்தனர் - கமிஷனர்

-சென்னை கலவரத்தில் 40 பேர் கைது செய்யப்பட்டனர் - கமிஷனர்

-நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளது - கமிஷனர்

-மாணவர்கள் யாரும் சாலை மறியலில் ஈடுபடவில்லை - கமிஷனர்

-சமூக வலைத்தள வதந்திகளை நம்பவேண்டாம் - கமிஷனர்

-வேறு சாலைகள் வழியாக மெரீனாவிற்கு சமூக விரோதிகள் ஊடுருவ முயற்சி

-சென்னை பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்

-போலீசார் தீ வைத்ததாக வெளியான வீடியோவை பார்க்கவில்லை

-போலீசார் வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுவது பற்றி விசாரணை செய்வோம்

-51 காவல்துறை வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன

-போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களிடம் அவசர சட்டம் பற்றி விளக்கப்பட்டது

-போராட்டத்தில் மாணவர்கள் மத்தியில் வேறு சில சக்திகள் ஊடுருவியிருந்தனர்

-மாணவர்கள் வாக்குறுதி அளித்தது போல கலைந்து செல்லவில்லை

-பிராதான கோரிக்கைகளில் இருந்து போராட்டக்காரர்களின் நோக்கங்கள் மாறியது

-சென்னை கலவரம் - காவல்துறை ஆணையர் விளக்கம்

-மெரீனாவில் இருந்து ஒருமணிநேரத்தில் கலைந்து செல்வதாக கூறினர்

-மெரீனாவில் கூடியிருந்தவர்கள் நடந்து கொண்டது விபரீதமாகி விட்டது

-மாணவர்கள் மத்தியில் வேறு சில சக்திகள் ஊடுருவி விட்டனர் - கமிஷனர் ஜார்ஜ்

-மாணவர்கள் வாக்குறுதி அளித்தது போல கலைந்து செல்லவில்லை - கமிஷனர் ஜார்ஜ்

-சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பு

-குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்

-ஜல்லிக்கட்டு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது

-தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டம் ஒருமனதாக நிறைவேறியது

-திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் சட்டத்திற்கு ஆதரவு

-மதுரை, செல்லூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர் மீது தடியடி

-போலீசாரின் தடியடியை அடுத்து இளைஞர்கள் கலைந்து சென்றனர்

-5 நாட்களாக வைகை பாலத்தில் சிறை பிடிக்கப்பட்ட ரயில் மீட்பு

-சென்னை சிட்டி சென்டர் அருகே போலீஸ் மீது கல்வீசி தாக்குதல்

-கல்வீசி தாக்கியவர்கள் மீது போலீஸ் தடியடி

-சென்னையில் மாநகர பேருந்து போக்குவரத்து நிறுத்தம்

-அயோத்தி குப்பம், நடுக்குப்பம் பகுதியில் மர்மநபர்கள் தீவைப்பு

-வீட்டின் அருகில் நிற்பவர்கள் மீது போலீசார் தடியடி

-அவ்வை சண்முகம் சாலையில் போலீசார் தடியடி

-பொதுமக்கள் பதறி அடித்து ஒட்டம்

-வீதி வீதியாக புகுந்து போலீசார் தாக்குதல்

-பீதியில் பொதுமக்கள்

-சென்னையின் பிற பகுதிகளில் இருந்து மைலாப்பூர் துண்டிப்பு

-பேருந்து போக்குவரத்து நிறுத்தம்

-மெரீனாவுக்கு வரும் 9 சாலைகளை பயன்படுத்த வேண்டாம் - போலீஸ்

-ஆட்டோக்கள் எதுவும் ஓடவில்லை

-சென்னை கானாத்தூர் அருகே மீனவர்கள் சாலை மறியல்

-சென்னை ஈசிஆர் சாலையில் போக்குவரத்து முடக்கம்

-சென்னை மயிலாப்பூர் டி.வி.கோயில் தெருவில் போலீஸ் வாகனங்கள் தீக்கிரை

-போலீஸ் பூத்தும் அடித்து நொறுக்கப்பட்டதால் பதற்றம்

-மாணவர்கள் போராட்டத்தில் தேச விரோத சக்திகள் ஊடுருவல் - காவல்துறை

-போராட்டக்காரர்கள் கல் வீசியதில் போலீஸ் ஆய்வாளர் ஒருவரின் மண்டை உடைந்தது

-போராட்டத்தை கலைக்க 5 முறை கண்ணீர் புகைகுண்டுகளை வீசி உள்ளனர் - காவல்துறை

-வானை நோக்கிய துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது - காவல்துறை

-தமிழகத்தின் பல இடங்களிலும் கேபிள் டிவி 'கட்'

-போராட்ட செய்திகளை டிவிகளில் பார்க்க முடியாமல் தடை

-ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு இடையே யாரோ புகுந்து விட்டனர் - லாரன்ஸ்

-நமக்கு தேவை ஜல்லிக்கட்டுதான் - லாரன்ஸ்

-மாணவர்கள் மத்தியில் ஏதேதோ பேசுகின்றனர் - லாரன்ஸ்

-கோவை காந்திபுரம் பஸ் நிலையம் அருகே மாணவர்கள் மீது தடியடி

-சாலை மறியல் செய்த மாணவ, மாணவிகள் குண்டுகட்டாக அகற்றம்

-இன்றும் 16 ரயில்கள் ரத்து

-தமிழக போராட்டம் காரணமாக ரயில்கள் ரத்து

-தெற்கு நோக்கி செல்லும் ரயில்களை ரத்து செய்தது ரயில்வே

-அலங்காநல்லூரில் போலீஸ் அணிவகுப்பு நடத்தப்பட்டது

-பொதுமக்கள் வீடுகளை விட்டு வரக் கூடாது என்று போலீஸ் எச்சரிக்கை

-கூடுதல் போலீஸாரும் குவிக்கப்படுகிறார்கள்

-திருவல்லிக்கேணியில் மீண்டும் கண்ணீர் குண்டு வீச்சு

-போராட்டக்காரர் மீது போலீசார் மீண்டும் தடியடி

-பதற்றம் குறையாத திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை பகுதிகள்

-வீட்டிற்குள் இருக்கும் பெண்கள், குழந்தைகள் அச்சம்

-அலங்காநல்லூரில் போலீஸ் வாகனம் மீது கல்வீச்சு

-பரஸ்பரம் தாக்கிக் கொள்வதால் பெரும் பதற்றம்

-தேனியில் போலீசார் தடியடி

-மாணவர்கள் மீது போலீசார் தடியடி

-மாணவர்கள் தொடர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

-அலங்காநல்லூரில் தடியடி நடத்திய போலீசார் மீது கல்வீச்சு

-போராட்டக்காரர்கள் சரமாரியாக கல்வீசி தாக்குதல் நடத்தினர்

-போர்க்களம் போல காட்சியளிக்கிறது ஜல்லிக்கட்டு பூமி அலங்காநல்லூர்

-அலங்காநல்லூரில் போலீஸ் தடியடி

-கலைந்து செல்ல மறுத்த போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி

-சென்னையில் வாகனங்களுக்கு தீவைப்பு

-ஈரோட்டில் இளைஞர்கள், மாணவிகள் குண்டுக்கட்டாக தூக்கி செல்லப்பட்டனர்

-ஈரோடு வ.உசி.மைதானத்தில் போராட்டம் நடந்தது

-தேசிய கீதம் பாடியபடி மாணவர்கள் போராட்டம்

-கண்டுகொள்ளாமல் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர் போலீஸால்

-போராட்டக்காரர்களை கலைந்து செல்ல போலீஸ் அறிவுறுத்தல்

-அலங்கநால்லூரில் தடியடி நடத்த வாய்ப்பு

-அலங்கநால்லூரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது

-ஊர்கமிட்டியினர் பேச்சை ஏற்க போராட்டக்குழுவினர் மறுப்பு

-அலங்காநல்லூரில் மாணவர்களுடன் ஊர் கமிட்டியினர் பேச்சுவார்த்தை

-பிப்ரவரி 1ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என போராட்டக்குழுவினருக்கு அறிவிப்பு

-மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

-போராட்டத்தைக் கைவிட மாணவர்கள் மறுப்பு

-எங்களிடம் கேட்காமல் தேதி முடிவு செய்வதா? - மாணவர்கள்

-காவல்துறையினர் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயார்

-போலீஸ் தடியடிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு

-அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது

-போலீஸ் மீது கல்வீச்சு எதிரொலி

-பாதுகாப்பு கவசங்களுடன் போலீஸ் குவிந்தனர்

-கடற்கரை சாலையில் அதிரடி போலீஸ் குவிப்பு

-காமராஜர் சாலையில் போக்குவரத்து நிறுத்தம்

-எம்.எல்.ஏக்கள் வாகனங்கள் கூட விட மறுப்பு

-அலுவலகங்கள் திறக்கப்படவில்லை

-சென்னையில் சாலை மறியல்

-கோடம்பாக்கம், கீழ்பாக்கத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

-மாணவர்களை போலீசார் தாக்கியதை கண்டித்து மறியல்

-சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை ரத்து

-மெரீனா கடற்கரைக்கு மாணவர்கள் வருவதை தடுக்க நடவடிக்கை

-மெரீனா கடற்கரையில் உள்ளவர்களை அப்புறப்படுத்த போலீஸ் தீவிரம்

-அலங்காநல்லூர் மக்கள் கோரிக்கையால் முடிவுக்கு வருகிறதா ஜல்லிக்கட்டு போராட்டம்?

-பிப்ரவரி 1ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த கிராம மக்கள் முடிவு

-ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற உதவியவர்களுக்கு நன்றி- விழா கமிட்டி

-எங்களுக்காக போராடிய இளைஞர்களுக்கு, மாணவர்களுக்கு பாதம் தொட்டு நன்றி - விழாக் கமிட்டி

-ஜல்லிக்கட்டுக்குத் தேவையான செலவுகளை அரசே ஏற்க வேண்டும் - சுந்தரராஜன்

-கிராம மக்கள் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் உறுதி - விழா கமிட்டி

-அரசே அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் - விழா கமிட்டி

-மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் தனி கேலரி அமைத்தது தரப்படும் - விழாக் கமிட்டி

-அலங்காநல்லூரில் பிப்ரவரி 1ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படும்- விழா கமிட்டி தலைவர் சுந்தரராஜன் அறிவிப்பு

-சென்னை வேளச்சேரி - கடற்கரை பறக்கும் ரயில் சேவை தற்காலிகமாக ரத்து

-மெரினா பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால் முன்னேச்சரிக்கை நடவடிக்கை

-சென்னை திருவல்லிக்கேணியில் மாணவர்கள் மீது கற்களை வீசி விரட்டியடித்த போலீசார்

-போர்களம் போல் காட்சியளிக்கும் குடியிருப்புப் பகுதி

-குடிசைப்பகுதிளில் பதுங்கியவர்களை விரட்டி விரட்டி தாக்கும் போலீஸ்

-மெரீனாவில் விரட்டியடிக்கப்பட்ட இளைஞர்கள் மீண்டும் ஒன்று திரண்டனர்

-போலீஸார் பெரும் திகைப்பு.. அதிர்ச்சி

-கடலையொட்டியும், கடலுக்குள் இறங்கிய நிலையிலும் ஆயிரக்கணக்கில் மாணவர்கள் திரண்டனர்

-எதிர்பாராத திடீர் திருப்பத்தால் பதட்டம் பல மடங்கு அதிகரிப்பு

-திருச்சியில் போராட்டக்காரர்கள் மவுனப் போராட்டத்தில் குதித்தனர்

-போலீஸ் சமாதானத்தை ஏற்க மறுத்து தொடர் போராட்டம்

-வாயில் கைகளை வைத்துக் கொண்டு நூதனப் போராட்டம்

-போலீஸார் என்ன பேசினாலும் பதில் பேச மாட்டோம் என்றும் அறிவிப்பு

-மெரீனா நோக்கி அயோத்திக்குப்பத்தில் 5000க்கும் மேற்பட்ட மக்கள் சாலையில் இறங்கி பேரணியாக வருகின்றனர்

English summary
Police attack on agitating students have created tension in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X