For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. வாட்ச் போட்டோக்களை நாங்கள் வெளியிடவில்லை.. காவல்துறை திடீர் பல்டி

கொடநாட்டில் கொள்ளையடித்தவர்களிடமிருந்து போலீசார் மீட்ட ஜெயலலிதா வாட்ச்,பளிங்கு பொம்மை ஆகியவை உள்ள போட்டோவை போலீசார் வெளியிடவில்லை.

By Devarajan
Google Oneindia Tamil News

நீலகிரி:கொடநாடு எஸ்டேட் கொள்ளை,கொலையில் ஈடுப்பட்டவர்களைப் பிடித்துள்ள போலீசார் அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஜெயலலிதா வாட்ச் மற்றும் பளிங்கு பொம்மை ஆகியவற்றை மீட்டனர் என்று செய்திகள் வெளியாகின.அது தொடர்பாக எழுந்த கேள்விகளையடுத்து அது தொடர்பாக பேசிய நீலகிரி எஸ்.பி. முரளி ரம்பா,'அந்த போட்டோ எங்களால் வெளியிடப்பட்டதல்ல ' என்று கூறியுள்ளார்.

போலீசார் வெளியிட்டதாக ஊடகங்களில் வெளியான போட்டோவை,நீலகிரி மாவட்ட எஸ்.பியே மறுத்துள்ளது வழக்கின் போக்கில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வாட்ச் ஜெயலலிதாவுடையது இல்லை என அதிமுகவினர் கூறியதும் போலீசார் பல்டியடிப்பதாக கூறப்படுகிறது. அதே போல போலீசுக்கும் தெரியாமல் இந்த வழக்கில் அதிமுக்கிய நபர் ஒருவரின் கரம் இருக்கிறது என்றும்,அவர்தான் கொடநாடு சம்பவங்கள் மற்றும் சாலை விபத்துக்களுக்கு காரணமாக இருக்கலாம் என்று அதிமுகவினர் கொதிக்கிறார்கள்.

Police denied their role in releasing Jayalalithaa's watch photos

கொடநாடு வழக்கில் பிடிபட்ட நபர்களிடம், 'ஷோகேஸில்' வைக்கப்படும் அலங்கார பொருட்கள் சில கைப்பற்றப்பட்டதாகவும், எஸ்டேட் பங்களாவில் உள்ள அறைகளில் திருடப்பட்ட ஐந்து கைக்கடிகாரங்களை கேரளா ஆற்றில் கொள்ளையர்கள் வீசி விட்டதாகவும் முதலில் போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மீட்கப்பட்ட கைக்கடிகாரங்கள் ஜெ.அணிந்தது இல்லை என்று வலுவாக மறுப்புகள் வெளிவந்தன.இதையடுத்து நீலகிரி மாவட்ட எஸ்.பி. முரளி ரம்பா அது போலீஸ் வெளியிட்ட போட்டோ இல்லை என்று பதில் கூறியிருக்கிறார்.வழக்கை விசாரிக்கும் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளருக்கே உண்மை எதுவென்று தெரியாமல் இருப்பது அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
We did not release Jayalalithaa's watch photographs, Police denied. Nilgiris District SP Murali Rambha said this to reporters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X