For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரிக்காக சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

காவிரி விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகளை வலியுறுத்தி மெரினாவில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மெரினாவில் மற்றுமொரு போராட்டத்திற்கு மீண்டும் ஒன்றுதிரண்ட இளைஞர்கள்

    சென்னை: காவிரி விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகளை வலியுறுத்தி மெரினாவில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி கோரியும் அதனை அரசிதழில் வெளியிடக் கோரியும் தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு நடைபெற்ற போராட்டம் பெரும் வெற்றி பெற்றது.

    குறிப்பாக சென்னை மெரினாவில் லட்சக்கணக்கான இளைஞர்கள் திரண்டு மாபெரும் போராட்டம் நடத்தினர். மெரினாவில் நடைபெற்ற போராட்டம் ஒட்டுமொத்த இந்தியா உட்பட உலகையை திரும்பி பார்க்க வைத்தது.

    மெரினாவில் போராட்டம்

    மெரினாவில் போராட்டம்

    இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் தமிழக இளைஞர்கள் சென்னை மெரினா கடற்கரையில் திரண்டு போராட்டம் நடத்தப்போவதாக தகவல் வெளியானது

    போலீசார் குவிப்பு

    போலீசார் குவிப்பு

    மெரினாவில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வந்த தகவலின் பேரில் போலீசார் குவிக்கப்பட்டனர். சென்னை-மெரினாவில் கண்ணகி சிலை, விவேகானந்தர் இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    வாகனங்களுக்கு கெடுபிடி

    வாகனங்களுக்கு கெடுபிடி

    ஜல்லிக்கட்டு போராட்டத்தை போன்ற நிகழ்வை தவிர்க்க காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டனர். வாகனங்களில் செல்வோரிடமும் போலீசார் விசாரித்து அனுப்பினர்.

    பள்ளி மாணவர்கள்

    பள்ளி மாணவர்கள்

    கூட்டமாக மெரினா கடற்கரைக்கு வருவோரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். போலீசாரின் கெடுபிடியால் வெப்பத்தை தணித்துக்கொள்ள கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

    போராட்டம் - போட்டோ

    போராட்டம் - போட்டோ

    சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியானதை தொடர்ந்து மறுதேர்வு நடத்த மாணவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரின் கெடுபிடியால் வெப்பத்தை தணித்துக்கொள்ள கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

    தேடுதல் வேட்டை

    தேடுதல் வேட்டை

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை பிடிக்க உதவி ஆணையர் உட்பட ஏராளமான போலீசார் மெரினா கடற்கரைக்கு சென்றனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை தீவிரமாக தேடினர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் பெண்கள் என 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    English summary
    Police Deployed in Chennai Marina to stop youths gather in beach. Students and youths plans to protest in Chennai Marina against Cauvery issue and Sterlite.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X