For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீமானை விடுவிக்கக்கோரி மண்டபம் முன்பு ஆர்ப்பாட்டம்.. போலீஸ் தடியடி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை விடுவிக்கக்கோரி அவர் தங்க வைக்கப்பட்டிருந்த மண்டபம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை விடுவிக்கக்கோரி அவர் தங்க வைக்கப்பட்டிருந்த மண்டபம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மோடியின் சென்னை வருகையை கண்டித்து போராட்டம் நடத்தியதால் இன்று கைது செய்யப்பட்ட சீமான், சென்னை பல்லாவரத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.

Police did latti Charge on the people who protest demanding Seeman release

ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தின் நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து சீமான் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்தது காவல்துறை. இந்நிலையில் சீமானை கொலை முயற்சி வழக்கில் கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Police did latti Charge on the people who protest demanding Seeman release

இந்நிலையில் சீமான், தமிமுன் அன்சாரியை விடுவிக்க கோரி மனிதநேய ஜனநாயக கட்சியினர் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.

Police did latti Charge on the people who protest demanding Seeman release

சீமானை சந்திக்க அவர் தங்க வைக்கப்பட்டுள்ள மண்டபத்திற்கு சுப. உதயகுமார், மன்சூர் அலிகான் ஆகியோர் வந்தனர். போலீசாரிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சீமானை சந்திக்க அனுமதிக்கவில்லை எனக் கூறி அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

English summary
Police did latti Charge on the people who protest demanding Seeman release. SP Udhayakumar and Mansoor Alikhan tried to meet Seeman in the Kalyana mandapam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X