For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாணவர்கள் மீது கல்வீச்சு... விரட்டி விரட்டி தாக்கிய போலீஸ்... போர்க்களமான திருவல்லிக்கேணி

சென்னை திருவல்லிக்கேணி, நடுக்குப்பம் ஆகிய பகுதிகளில் ஓடிய மாணவர்கள் மீது போலீசார் கற்களை வீசி விரட்டியடித்தனர். இதில் ஏராளமான இளைஞர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: திருவல்லிக்கேணி நடுக்குப்பம் ஆகிய பகுதிகளில் தடியடிக்கு பயந்து சிதறி ஓடிய மாணவர்கள் மீது போலீசார் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.

சென்னை மெரினாவில் 7வது நாளாக இன்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இன்று காலை போராட்டத்தை கைவிட்டு மாணவர்களை போலீசார் கலைந்து போகும்படி கூறினர்.

police

இதற்கு மறுக்கவே போலீசார் அவர்கள் மீது தடியடியை கட்டவிழ்த்துவிட்டனர். இதனால் சிதறியோடிய மாணவர்களை விரட்டி விரட்டி போலீசார் தாக்கினர்.

சென்னை திருவல்லிக்கேணி, நடுக்குப்பம் ஆகிய பகுதிகளில் மாணவர்கள் ஓடினர். அப்போது குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியே வரவேண்டாம் என போலீசார் அறிவுறுத்தினர்.

பின்னர் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்த ஜல்லிக்கற்களை அள்ளி வீசி ஓடிய மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். தலைக்கவசம் அணிந்தப்படி போலீசார் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. குடிசைப்பகுதிளில் பதுங்கியவர்களையும் போலீசார் விரட்டி விரட்டி தாக்கினர். இதனால் திருவல்லிக்கேணி பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

English summary
Police did stone pelting on students who were running away from Marina. Police traced the students and used batons charge on students.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X