For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமராவதி ஆற்றுப் படுகையை தூர்வாரிய நாம் தமிழர் கட்சியினர் 13 பேர் மீது வழக்கு

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    அமராவதி ஆற்றுப்படுகையைத் தூர்வாரிய நாம் தமிழர் கட்சியினர் 13 பேர் மீது வழக்கு- வீடியோ

    சென்னை: அமராவதி ஆற்றுப்படுகையைத் தூர்வாரிய நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையினர் 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அக்கட்சியினர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    Police files casd against Naam Tamilar Movement for cleaning the river bed

    நெகிழிகள், குப்பைகள், கருவேலமரப் புதர்கள் மண்டிக்கிடக்கும் கரூர், அமராவதி ஆற்றுப்படுகையைத் தூர்வாரக்கோரி பலமுறை மனு கொடுக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனால் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையினர் பொக்லைன் இயந்திரம் கொண்டு தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காவல்துறை மற்றும் பொதுப்பணித் துறையினர் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பெண் உட்பட 13 பேர் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அவர்கள் 13 பேரையும் சிறைப்படுத்துவதற்காக நீதிபதி முன் நிறுத்தப்பட்டபோது இவ்வழக்கில் சிறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று காவல்துறையினரின் கோரிக்கையை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதின் பேரில் 13 பேர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

    மேலும், அரசும் பொதுப்பணித் துறையினரும் செய்யவேண்டிய வேலையை பொதுமக்களே செய்துள்ளனர். இதற்காக கடும் சட்டப்பிரிவுகளின் கீழ் சிறைப்படுத்துவதா என்று நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    வழக்கு பதியப்பட்டுள்ளவர்களின் விவரம்

    1. சு. இரமேசு
    2. செல்வ நன்மாறன்
    3. ப.கார்த்திக்
    4. லோகேஸ்.
    5. பாபு
    6. மதுபாலா
    7. மாவடியான்
    8. து.பாபு
    9. சரவணன்
    10. மோகன்
    11. சசிகுமார்
    12. கோபி
    13. குழந்தைவேல்

    இவர்கள் அனைவரையும் வழக்கிலிருந்து முழுமையாக மீட்க வழக்கறிஞர் பாசறை குழு துரிதமாக செயற்பட்டு வருகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    English summary
    Police files case against 13 belongs to Naam Tamilar Movement for cleaning the River bed of Amaravati.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X