தஷ்வந்துக்கு தூக்கு: நீதிமன்றத்தில் மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய போலீஸார்

செங்கல்பட்டு: தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவுடன் நீதிமன்றத்தில் இருந்த மக்களுக்கு போலீஸார் இனிப்புகளை வழங்கியும் வழக்கறிஞர்கள் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
போரூரை அடுத்த முகலிவாக்கம் பாபு- ஸ்ரீதேவி தம்பதியின் குழந்தை ஹாசினி. இவரை ஒரே குடியிருப்பு பகுதியில் வசித்த 22 வயதான தஷ்வந்த் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து தீவைத்து எரித்து கொன்று விட்டார்.

இதையடுத்து இது தொடர்பாக செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் தஷ்வந்துக்கு மகிளா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.
இதை கேட்டதும் போலீஸார் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். அங்கிருந்த வழக்கறிஞர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!