For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேலத்தில் டாஸ்மாக் கடைகளை மூடகோரி போராட்டம்... தரதரவென இழுத்துச் சென்ற போலீஸ்!

சேலத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராடிய இளைஞர்கள் போலீஸ் வாகனத்துக்கு அடியில் படுத்துப் போராடினார்கள். அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக தரதரவென இழுத்துச் சென்றனர்.

By Suganthi
Google Oneindia Tamil News

சேலம்: டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கையுடன் போரடிய இளைஞர்கள், போலீஸாரிடம் சிக்காமல் வாகனத்தின் அடியில் படுத்துப் போராடினர். இருந்தபோதும் போலீசார் அவர்களை தரதரவென இழுத்துக் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நெடுஞ்சாலைகளில் அமைந்திருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. இருப்பினும் டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக மூட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை.

Police handled protestors violently in salem

சேலம் நகரில், டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களை காவல்துறையினர் கைது செய்ய முற்பட்டனர். கைது செய்வதைத் தடுக்க, இளைஞர்கள் போலீசாரின் வேனுக்கு அடியில் படுத்து முழக்கம் எழுப்பினர்.

ஆனாலும் போலீஸ் விடாது கருப்புவாக செயல்பட்டு, வாகனத்துக்கு அடியில் படுத்திருந்தவர்களை தரதரவென பிடித்து இழுத்தது. இதனால் போலீசாருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் வாக்குவதம் உண்டானதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதையும் மீறி, இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

English summary
In Salem youngsters protested against TASMAC. They lying under the police van, even though police arrested them violently.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X