For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருமணமான பெண்ணை கள்ளக்காதலனுடன் அனுப்பிவைத்த போலீஸ்.. அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்!

ராமநாதபுரம் அருகே திருமணமான பெண்ணை போலீசார் கள்ளக்காதலனுடன் அனுப்பி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

ராமநாதபுரம்: ஏர்வாடி அருகே திருமணமான பெண்ணை போலீசார் கள்ளக்காதலனுடன் அனுப்பி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்காதல் குற்றமல்ல என உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பும் ஆதரவும் ஒரு சேர கிளம்பியது.

இதைத்தொடர்ந்து கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகின்றன. உச்சநீதிமன்றமே கூறிவிட்டது கள்ளக்காதலை கைவிட முடியாது என கணவர் கூறியதால் சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்த பெண் தற்கொலை செய்துகொண்டார்.

ஏர்வாடி நளாயினி

ஏர்வாடி நளாயினி

இந்நிலையில் ராமநாதபுரம் அருகே திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன பெண்ணை போலீசார் கள்ளக்காதலனுடன் அனுப்பி வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்தவர் நளாயினி.

மனைவியை அழைத்து செல்ல..

மனைவியை அழைத்து செல்ல..

இவருக்கும் சின்ன ஏர்வாடியை சேர்ந்த ஆனந்த பிரகாசுக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணமான 21 ஆவது நாளில், சவுதி அரேபியாவுக்கு ஆனந்த பிரகாஷ் சென்று விட்டார். தற்போது, தனது மனைவியை சவுதிக்கு அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை ஆனந்த பிரகாஷ் செய்து வந்துள்ளார்.

காதலனுடன் ஓட்டம்

காதலனுடன் ஓட்டம்

விமான டிக்கெட்டை அவர் அனுப்பிய நிலையில் கடந்த 7ம் தேதியில் இருந்து நளாயினி மாயமாகியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் ஏர்வாடி போலீசார் விசாரித்தபோது நளாயினி, தனது காதலன் வெண்ணிலவனுடன் இருப்பது தெரியவந்தது. இருவரையும் அழைத்து வந்து விசாரித்தபோது கல்லூரியில் படித்தபோது இருவரும் காதலித்ததாகவும் பெற்றோருக்கு தெரிந்ததால் அவசரமாக திருமணம் செய்து வைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

[ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.. 18 வயசுகூட இன்னும் முடியல இவங்களுக்கு.. என்ன கொடுமை!]

உறவினர்கள் அதிர்ச்சி

உறவினர்கள் அதிர்ச்சி

மேலும் திருமணத்திற்கு பிறகும் தங்களின் காதல் தொடர்ந்ததாகவும் கூறிய நளாயினி காதலருடன் செல்லவே விரும்புவதாகவும் கூறினார். இதையடுத்து, உதவி ஆய்வாளர் சரவணன், 22 வயதை கடந்துள்ளதால் விரும்பியவருடன் வாழ நளாயினிக்கு உரிமை உண்டு என கூறியதால் உறவினர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

உச்சநீதிமன்றமே கூறிவிட்டது

உச்சநீதிமன்றமே கூறிவிட்டது

காணவில்லை என புகார் அளித்தால் கண்டுபிடித்து தருவதுதான் உங்கள் வேலை, கள்ளக்காதலனுடன் அனுப்புவது இல்லை எனக்கூறி உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு பதிலளித்த உதவி ஆய்வாளர் சரவணன், உச்சநீதிமன்றமே கள்ளக்காதல் தவறில்லை என கூறிவிட்டது நான் என்ன செய்ய முடியும் என்றார்.

ஏர்வாடியில் பரபரப்பு

ஏர்வாடியில் பரபரப்பு

மேலும் உறவினர்களையும் காவல் ஆய்வாளர் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தார். திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் பெண்ணை அவரது கள்ளக்காதலனுடன் போலீசார் அனுப்பிவைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

English summary
Police has sent a married girl with her illicit lover in Ramanathapuram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X