For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எங்க ஊது.. கொடுங்க ஏட்டையா அதை.. ஆடிக்கிட்டே.. நக்கல் வாலிபர்.. வைரல் வீடியோ..!

Google Oneindia Tamil News

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய இளைஞர் ஒருவர் ப்ரீத் அனலைசர் கருவியில் புல்லாங்குழல் போல ஊதி ஆட்டம் போட்ட காமெடிக் காட்சி வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Recommended Video

    குடித்துவிட்டு போலீசிடம் நக்கல் செய்த இளைஞர் - வீடியோ

    நாடு முழுவதும் போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போக்குவரத்து விதிமீறல்களுக்கான கட்டணம் பன்மடங்கு வசூலிக்கப்பட்டு வருகிறது.

    Police have fined a teenager for drunk driving

    அதாவது இந்த புதிய சட்டத்தின்படி ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 1000 ரூபாய், செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டினால் ரூபாய் 5 ஆயிரமும், மதுபோதையில் வாகனம் ஓட்டினால் ரூபாய் 10 ஆயிரமும், சிறுவர்கள் வாகனம் ஓட்ட அனுமதித்தால் ரூபாய் 25 ஆயிரமும், அதிக பாரம் ஏற்றி சென்றால் ரூபாய் 20 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படுகிறது.

    நாடுமுழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி, போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் வாகன சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால் போக்குவரத்து விதிமீறல்கள் ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

    Police have fined a teenager for drunk driving

    இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் கடந்த சில நாட்களுக்கு போலீசாரின் தீவிர வாகன சோதனையில், இளைஞர் ஒருவர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிவந்துள்ளார். அவரை காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார், மது சோதனை கருவியான ப்ரீத் அனலைசர் கொடுத்து ஊதுமாறு கூறியுள்ளனர்.

    சுற்றுலா பயணிகள் இனி சுற்றுலா பயணிகள் இனி "பறக்கலாம்".. புதுச்சேரி சுற்றுலாத் துறை புதிய திட்டம்!

    அதற்கு அந்த இளைஞர் கொஞ்சம் கூட நிதானம் இல்லாமல், ப்ரீத் அனலைசர் கருவியை வைத்து புல்லாங்குழல் ஊதுவதுபோல் ஆட்டம் போடுகிறார். இதை
    பார்த்து அருகில் இருந்த போலீசார் அந்த இளைஞரை கேலி செய்கின்றனர். தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி சிரிப்பலையை ஏற்படுத்தி வருகிறது.

    English summary
    Police have fined a teenager for drunk driving
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X