For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு போராட்டம்... போலீஸ் மீண்டும் தடியடி

தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு பொதுமக்கள்-போலீஸ் தள்ளுமுள்ளு- வீடியோ

    தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் நேற்று 100-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது போலீஸார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டு வீசியும் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயன்றனர்.

    12 பேரை பலி கொண்ட துப்பாக்கிச் சூடு

    12 பேரை பலி கொண்ட துப்பாக்கிச் சூடு

    போலீஸாரை முண்டியடித்துக் கொண்டு ஆட்சியர் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர். அப்போது போலீஸார் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பேர் பலியாகிவிட்டனர்.

    உயிரிழந்தவர்களின் உறவினர்கள்

    உயிரிழந்தவர்களின் உறவினர்கள்

    இந்நிலையில் இறந்தவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஆட்சியர் மற்றும் எஸ்பி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இன்று போராட்டம் நடைபெற்றது.

    போராட்டம்

    போராட்டம்

    அதுபோல் பிரேத பரிசோதனை அறை முன்பும் போராட்டம் நடத்தப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும், போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    கலைந்து போக உத்தரவிட்ட போலீஸ்

    கலைந்து போக உத்தரவிட்ட போலீஸ்

    144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால் உறவினர்கள் ஓரிருவரை தவிர மற்றவர்கள் கலைந்து செல்லுமாறு போலீஸார் கூறியும் கேட்காததால் மக்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மேலும் அரசு மருத்துவமனைக்கு தூத்துக்குடி ஆட்சியர் வருவதாலும் தடியடி நடத்தப்பட்டது.

    English summary
    Police Lathicharge in Tuticorin those who protest in front of Tuticorin Hospital.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X