For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருப்பூரில் எதிர்க்கட்சியினர் மீது போலீஸ் தடியடி... கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து

கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேட்டை தட்டி கேட்டதால் திருப்பூரில் எதிர்க்கட்சியினர் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதையடுத்து தேர்தலும் ரத்து செய்யப்பட்டது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    திருப்பூரில் எதிர்க்கட்சியினர் மீது போலீஸ் தடியடி-வீடியோ

    திருப்பூர்: கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேட்டை எதிர்க்கட்சியினர் தட்டி கேட்டதால் அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதை தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் தேர்தலை அதிகாரிகள் ரத்து செய்தனர்.

    கூட்டுறவு, பால்வளம், மீன்வளம், கைத்தறி-துணிநூல், வீட்டுவசதி உள்பட தமிழக அரசின் பல்வேறு துறைகளின் கீழ் 18, 775 கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில் கடந்த 2013-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் இம்மாதத்துடன் முடிவடைந்து விட்டது.

    Police lathicharge on Opposition party in Tiruppur

    2018-ம் ஆண்டுக்கான கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர் தேர்தல் 5 கட்டங்களாக நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக தொடக்க நிலை கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் முதல் நிலையில் உள்ள 4 ஆயிரத்து 698 கூட்டுறவு சங்கங்களுக்கு கடந்த மாதம் 26-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் நடந்தது.

    அப்போது ஆளுங்கட்சியினருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. கடும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான முதல்நிலை தேர்தலில் 4 ஆயிரத்து 366 கூட்டுறவு சங்கங்களில் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    Police lathicharge on Opposition party in Tiruppur

    இதையடுத்து பாதிக்கப்பட்ட 31 சங்கங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. பின்னர் விதிமுறைகள் மீறப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்க சென்னை ஹைகோர்ட் கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து திருவாரூர், நாகை, வேலூர், காஞ்சிபுரம், சேலம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற தேர்தலை ஆணையர் ரத்து செய்து உத்தரவிட்டார்.

    இந்நிலையில் திருப்பூரில் கூட்டுறவு வீட்டு வசதி சங்க தேர்தல் இன்று நடைபெற்று வந்தது. அதன் சங்கத்துக்குள் அதிமுகவினருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சியினர் கூட்டுறவு சங்க முறைகேட்டை தட்டி கேட்டு மறியல் நடத்தினர். இதனால் அங்கிருந்த போலீஸார் அவர்கள் மீது தடியடி நடத்தினர்.

    பதற்றமான சூழல் நிலவுவதால் கூட்டுறவு சங்க தேர்தலை அதிகாரி ரத்து செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.கூட்டுறவு தேர்தல் முறைகேட்டை தட்டி கேட்ட எதிர்க்கட்சியினர் மீது போலீஸ் தடியடி

    English summary
    Police Lathicharge on opposition party in Tiruppur. Only ADMK candidates are allowed for election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X