For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொள்ளையன் நாதுராம் உள்பட 3 பேர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை கொளத்தூர் நகைக் கடையில் கொள்ளையடித்த வட மாநில இளைஞர்களான நாதுராம் உள்பட 3 பேரை போலீஸார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை கொளத்தூர் நகைக் கடையில் கொள்ளையடித்த வட மாநில இளைஞர்களான நாதுராம் உள்பட 3 பேர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சென்னை கொளத்தூரில் நடைபெற்ற நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய குற்றவாளி நாதுராமை பிடிக்கச் சென்ற போது சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார். இறுதியில் கொள்ளையர்களிடம் சிக்கிக் கொண்ட பெரியபாண்டியனை காப்பாற்ற சக போலீஸார் சுடும் போது அது குறி தவறி பெரியபாண்டியன் மீது பட்டுவிட்டதாக ராஜஸ்தான் போலீஸார் தெரிவித்தனர்.

Police Nathuram and itshis aides appeared before Egmore Court

இதற்காக நாதுராமை பிடிக்க ராஜஸ்தான் போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 18-ஆம் தேதி குஜராத்தில் பதுங்கியிருந்த அவரை கைது செய்த தனிப்படை போலீஸார் அவரை சென்னை போலீஸிடம் ஒப்படைத்தது.

நாதுராம், பத்தாராம், தினேஷ் சவுத்ரி ஆகியோர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் அனுமதி கேட்டனர். அதன்படி நீதிபதி உத்தரவிட்டனர்.

இந்நிலையில் 10 நாட்கள் முடிய இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில் இன்றைய தினமே நாதுராம் உள்பட 3 பேரை போலீஸார் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

English summary
Chennai Police produces Nathuram and his aides before Egmore Court. They are in connection with big robberies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X