For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவலர் உடல்தகுதித் தேர்வு நாளை முதல் தொடக்கம் - வீடியோ

இரண்டாம் நிலை காவலர்களை தேர்தெடுப்பதற்கான உடல்தகுதி தேர்வு நாளை முதல் ஆகஸ்டு 8 வரை விழுப்புரம் மையத்தில் நடக்கவுள்ளது. இதில் 6,,000 பேர் கலந்துகொள்கிறார்கள்.

By Suganthi
Google Oneindia Tamil News

விழுப்புரம்: விழுப்புரத்தில் சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் நாளை முதல் காவலர்கள் உடல்தகுதி தேர்வை நடத்தவுள்ளது. இதில் 6000 பேர் பங்கேற்கவுள்ளனர்.

சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் கடந்த ஜூன் மாதம் 21ஆம் தேதி இரண்டாம்நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வை நடத்தியது. இந்த தேர்வின் மூலம் தீயணைப்புத்துறை, சிறைத்துறை உள்ளிட்ட துறைகளுக்கு காவலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Recommended Video

    Physical Selection For Police starts Tomorrow-Oneindia Tamil

    எழுத்துத் தேர்வின் முடிவுகள் கடந்த ஜூலை 7ஆம் தேதி வெளியானது. அதில் 4.82 லட்சம் பேர் தேர்வெழுதியதில் 28,051 பேர் எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்றுள்ளனர்.

    இவர்களுக்கு, 6 மையங்களில் உடல் தகுதி தேர்வு நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 6,000 பேர் உடல் தகுதித் தேர்வில் பங்கேற்க உள்ளனர். இதில் ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர் கலந்துகொள்கின்றனர். நாளை தொடங்கி, ஆகஸ்டு 8ஆம் தேதி வரை இத்தேர்வு நடக்கும் என்றும் தேர்வு நடக்கும் இடத்துக்கு வந்து செல்ல சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யபப்ட்டுள்ளது எனவும் டிஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

    English summary
    In Vilupuram police selection physical examination test will be conducted from July 27 to August 8th and 6,000 candidates participating in this.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X