For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுட்டுக் கொல்லப்பட்ட காளியப்பன் உடலை தரதரவென இழுத்து செல்லும் போலீஸ்.. பதறவைக்கும் வீடியோ

Google Oneindia Tamil News

Recommended Video

    துப்பாக்கிச் சூட்டில் பலியான காளியப்பன் உடலைப் பார்த்து பேசிய போலீஸார்-வீடியோ

    தூத்துக்குடி: அண்ணாநகரில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட காளியப்பன் என்ற இளைஞரின் உடலை போலீசார் தரதரவென இழுத்து செல்லும் காட்சி அதிர வைத்துள்ளது.

    தூத்துக்குடி அண்ணாநகர் 7வது தெருவில் இன்று பகல் போலீசாருக்கும் ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    அப்போது போலீசார் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து பதிலடி தாக்குதல் நடத்திய போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    துப்பாக்கிச்சூட்டில் பலி

    துப்பாக்கிச்சூட்டில் பலி

    இதில் 22 வயதான காளியப்பன் என்ற இளைஞர் கொல்லப்பட்டார். 5 பேர் படுகாயமடைந்தனர்.

    பதற வைக்கும் காட்சிகள்

    பதற வைக்கும் காட்சிகள்

    இந்நிலையில் காளியப்பன் சுட்டுக்கொல்லப்பட்ட காட்சியும் அவரது உடலை போலீசார் தரதரவென இழுத்து செல்லும் வீடியோ காட்சியும் வெளியிடப்பட்டுள்ளது.

    சரிந்து உட்காருகிறார்

    சரிந்து உட்காருகிறார்

    அதில் போலீசார் மீது கற்களை வீசும் இளைஞர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்துகின்றனர். அப்போது திடீரென சாலையோரம் அப்படியே சரிந்து உட்காருகிறார் ஒரு இளைஞர்.

    லத்தியால் முகத்தை தூக்கி..

    லத்தியால் முகத்தை தூக்கி..

    பின்னர் மக்களை விரட்டியபடியே வரும் போலீசார் அந்த இளைஞரின் முகத்தை லத்தியால் தூக்கிபார்க்கின்றனர். அப்போது அப்படியே பின்னால் சரிகிறார் அந்த இளைஞர்.

    தரதரவென இழுத்து செல்கின்றனர்

    தரதரவென இழுத்து செல்கின்றனர்

    பின்னர் அந்த இளைஞரின் உடலை காலை பிடித்து தரதரவென இழுத்து செல்கின்றனர் போலீசார். இந்த பதற வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பெரிதும் பகீரப்பட்டு வருகிறது.

    English summary
    Police did shooting in Thoothukudi today also. In this incident a youth named Kaliyappan killed. Police pulled Kaliyappan's body on the street.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X