For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூவத்தூர் ரிசார்ட் போல மாறிய புழல் சிறை.. கைதிகளின் அறையில் டிவிகள், எப்எம் ரேடியோக்கள் சிக்கின!

புழல் சிறையில் இருந்து 18 டிவிகள், எப்எம் ரேடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பணம் இருந்தால் வெளியில் மட்டுமல்ல சிறையிலும் ராஜ வாழ்வு !

    சென்னை: புழல் சிறையில் இருந்து 18 டிவிகள், எப்எம் ரேடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழக சிறைச்சாலைகளில் தண்டனை பெற்று வரும் கைதிகளுக்கு கைப்பேசி புழக்கம், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் போன்ற பயன்பாடு அதிகரித்து வருவதாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.

    இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சென்னை புழல் சிறையில் இதே சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது கைப்பேசிகள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கைதிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

    வெளியான போட்டோக்கள்

    வெளியான போட்டோக்கள்

    இந்நிலையில் சென்னை புழல் சிறையில் உள்ள தீவிரவாதிகளுக்கு சிறப்பு வசதி செய்து தரப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் கைதி ரசூலுதீன் சொகுசாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியானது.

    டிபன் பாக்ஸ்கள்

    டிபன் பாக்ஸ்கள்

    இதைத்தொடர்ந்து ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா நேரில் ஆய்வு செய்தார். அப்போது அலுவலகங்களுக்கு மதிய உணவு எடுத்து செல்பவர்கள் பயன்படுத்தும் டிபன்பாக்ஸ்களும் சிறைச் சாலைகளுக்குள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    கைதிகளுக்கு சிறப்பு வசதி

    கைதிகளுக்கு சிறப்பு வசதி

    தற்போது 250 கைதிகளின் சொகுசு வாழ்க்கை புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோர் அறைகளில் டி.வி. உள்ளிட்ட சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.

    போட்டோக்கள் பழசு

    போட்டோக்கள் பழசு

    இதுதொடர்பான புகைப்படம் வெளியானதால் சிறையில் சொகுசு வசதி செய்து கொடுத்திருப்பது அம்பலமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் வெளியான போட்டோக்கள் பழசு என்று கூறப்பட்டது.

    டிவிகள் ரேடியோக்கள் பறிமுதல்

    டிவிகள் ரேடியோக்கள் பறிமுதல்

    இந்நிலையில் புழல் சிறையில் டிஐஜி முருகேசன் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதில் கைதிகளின் அறையில் 18 டிவிகள், எப்எம் ரேடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    பின்னணியில் யார்?

    பின்னணியில் யார்?

    தண்டனை அனுபவிக்க வந்த கைதிகள் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்வது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து கைதிகளுக்கு இவ்வளவு வசதிகளையும் செய்து கொடுத்தது யார்? அதன் பின்னணியில் இருப்பது யார் என்று விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Police raid in Puzhal jail seized 18 TVs and FM Radios.Photos have been released that Prisoners living luxery life in Puzhal jail.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X