For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவையிலும் ஒரு நிர்மலா தேவி... மாணவிகளை மது அருந்தவும் நெருங்கி பழகவும் வற்புறுத்திய கொடுமை

கோவையில் மகளிர் தங்கும் தனியார் விடுதியில் மாணவிகளை மது அருந்தவும் நெருங்கி பழகவும் விடுதி காப்பாளர் ஒருவர் வற்புறுத்தியதாக புகார் எழுந்தது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    மாணவிகளை மது அருந்தவும் நெருங்கி பழகவும் வற்புறுத்திய விடுதி காப்பாளர்- வீடியோ

    கோவை: கோவை பீளமேட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் மாணவிகளை விடுதி காப்பாளர் பாலியல் தொழிலுக்கு அழைப்பதாக புகார் எழுந்துள்ளது.

    கோவை பீளமேடு பாலரங்கநாதபுரத்தில் மகளிர் விடுதி ஒன்று உள்ளது. இங்கு கல்லூரி மாணவிகள், வேலை செய்யும் இளம் பெண்கள் என 200-க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.

    ஜெகன்னாதன் என்பவருக்கு சொந்தமான இந்த விடுதியில் ஹாஸ்டல் வார்டனாக இருப்பவர் புனிதா. விடுதியில் உள்ள பெண்கள், கல்லூரி மாணவிகளை பிறந்த நாள் விழாவுக்கான பார்ட்டி என்று கூறி புனிதா அவர்களை நட்சத்திர விடுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

    மதுபோதையில் புனிதா

    மதுபோதையில் புனிதா

    மாணவிகளை மதுஅருந்த வற்புறுத்தியுள்ளார். மேலும் விடுதி உரிமையாளர் ஜெகநாதனுடன் வாட்ஸ் ஆப் வீடியோவில் பேசவும் வற்புறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் புனிதா மதுபோதையிலேயே இருப்பதாக மாணவிகள் கூறுகின்றனர்.

    பெற்றோருக்கு தகவல்

    பெற்றோருக்கு தகவல்

    அப்போது மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துள்ளார். இதுகுறித்து மாணவிகள் தங்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பெற்றோர்களும், உறவினர்களும் விடுதியை முற்றுகையிட்டனர்.

    வழக்கு பதிவு

    வழக்கு பதிவு

    இதனால் அச்சமடைந்த விடுதி உரிமையாளர் ஜெகன்நாதன் மற்றும் காப்பாளர் புனிதா ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து புகாரின் பேரில் இருவரின் பேரிலும் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் பீளமேடு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

    பரபரப்பு

    பரபரப்பு

    இருவரையும் பிடிக்க பீளமேடு காவல் ஆய்வாளர் செல்வராஜ் இரு தனிப்படைகள் அமைத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அருப்புக்கோட்டையில் ஒரு கல்லூரி பேராசிரியையாக இருந்த நிர்மலா தேவி, அவரது மாணவிகளை பல்கலைக்கழக உயரதிகாரிகளின் படுக்கையை பகிர்ந்து கொள்ள அழைப்பு விடுத்தார். இதையடுத்து புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Police searches for the hostel warden and owner of Coimbatore private Hostel for inviting to share bed with owner of the hostel.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X