For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

”பங்காளி சண்டைல தலையிடுவியா? “ விலக்கப் போன எஸ்ஐக்கு விழுந்த தர்ம அடி

Google Oneindia Tamil News

சென்னை: டாஸ்மாக்கால் யாருக்கு தலைவலியோ, இல்லையோ காவல்துறையினருக்குதான் தினம் தினம் தீபாவளியாக உள்ளது.

அப்படித்தான் குடித்துவிட்டு "புல்" போதையில் சண்டை போட்ட அண்ணன், தம்பியை விலக்கிவிட போய் தர்ம அடி வாங்கியுள்ளார் போலீஸ் எஸ்ஐ ஒருவர்.

எஸ்ஐயை அடித்த அண்ணன், தம்பி இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர் போலீஸார்.

சேர்ந்து குடிப்போமா? :

சென்னை சூளைமேடு அபித் நகரை சேர்ந்தவர்கள் ரமேஷ் மற்றும் அவரது தம்பி சுரேஷ் ஆகிய இருவரும் ஓட்டுனராக உள்ளனர்.இருவரும் நேற்று சூளைமேடு, சவுராஷ்டிரா நகரில் உள்ள டாஸ்மாக்கில் மது அருந்தினர்.

போதையால் வந்த வினை:

பின்னர் , வெளியே வந்த இருவரும் போதை தலைக்கேறியதால் நடுரோட்டில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்க தொடங்கினர். அந்த வழியாக சென்ற சூளைமேடு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வேடி இருவரையும் சண்டைபோடாமல் இருக்கும்படி கண்டித்தார்.

எவ்வளவு தைரியம் உனக்கு? :

அப்போது ஒன்று சேர்ந்து கொண்ட சகோதரர்கள் இருவரும் எஸ்ஐயை தாக்கினர். "அண்ணன் மேலேயே கை வைக்கிறாயா?" என்று சுரேசும், "தம்பி மேல் கை வைக்கிறாயா? " என்று ரமேசும் மாறிமாறி எஸ்.ஐயை அடித்து உதைத்துவிட்டு தப்பிஓடிவிட்டனர்.

எஸ்ஐ புகார்:

இந்த எதிர்பாராத திடீர் தாக்குதலில் காயம் அடைந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வேடி சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் வேப்பேரி போலீசில் அவர் அளித்த புகாரை அடுத்து சுரேசை இன்று காலை கைது செய்தனர்.

வழக்கு பதிவு:

அவரது தம்பி ரமேஷை தீவிரமாக தேடிவருகின்றனர். இவர்கள் இருவர் மீது அரசு ஊழியர் தாக்குதல், பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வேப்பேரி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

English summary
Police SI hit by brother who are in drunken situation. They both fought in street and the SI went to control them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X