For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமிறிய "புல்லட்".. பொடணியில் அடித்து தூக்கிச் சென்ற போலீஸ்.. பெரியகுளத்தில் பரபரப்பு!

Google Oneindia Tamil News

Recommended Video

    தப்ப முயன்ற புல்லட்டை பொடணியில் அடித்து தூக்கிச் சென்ற போலீஸ்-வீடியோ

    பெரியகுளம்: பெரியகுளம் இன்று பரபரப்பாக காணப்பட்டது. காரணம், புல்லட் நாகராஜன் கைது. போலீஸ் பிடியிலிருந்து தப்ப முயன்ற புல்லட்டை பின்னந்தலையில் அடித்து தூக்கிச் சென்றது போலீஸ்.

    பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவருக்கு போலீஸ் தரப்பில் புல்லட் நாகராஜன் என்று பெயர் தரப்பட்டுள்ளது. காரணம், இவர் புல்லட்டில் பயணித்து பல்வேறு செயல்களில் ஈடுபட்டவர் என்பதால்.

    சமீபத்தில் வாட்ஸ் ஆப் ஆடியோ மூலமாக பெண் எஸ்பி ஊர்மிளா, இன்ஸ்பெக்டர் மதனகலா, தேனி மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு எச்சரிக்கை விடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார் புல்லட். இதையடுத்து அவரைக் கைது செய்ய போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது.

    பெரியகுளத்தில் வைத்து மடக்கிய போலீஸ்

    பெரியகுளத்தில் வைத்து மடக்கிய போலீஸ்

    இந்த நிலையில் இன்று காலை பெரியகுளத்தில் உள்ள சர்ச்சுக்கு அருகே வைத்து போலீஸார் புல்லட் நாகராஜனைக் கைது செய்தனர். போலீஸார் கைது செய்ய முயன்றபோது தப்பிக்க முயன்றுள்ளார் புல்லட். இதையடுத்து போலீஸார் பலப்பிரயோகம் செய்து அவரை மடக்கியுள்ளனர்.

    திமிறிய புல்லட்

    திமிறிய புல்லட்

    இதுதொடர்பாக ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் பிடிபட்ட புல்லட் நாகராஜனை பைக்கிலிருந்து கீழே இறக்குகிறார் போலீஸ் சீருடையில் இல்லாத ஒருவர். சட்டையை கெத்தாக பிடித்தபடி அவரை இழுத்துச் ஜீப்பை நோக்கி செல்ல முயல்கிறார். அப்போது புல்லட் நாகராஜன் திமிறி விடுபட முயல்கிறார்.

    பின்னந்தலையில் அடி

    பின்னந்தலையில் அடி

    உடனே அந்த சீருடையில் இல்லாத நபர், ஓங்கி நாகராஜனின் பின்னந்தலையில் (பொடணி) ஓங்கி அடிக்கிறார். பின்னர் ஜீப்பை நோக்கி இழுத்துச் சென்று உள்ளே தள்ளுகிறார். பொது மக்கள் மத்தியில் நடந்த இந்த சம்பவம் அங்கு பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

    தென்கரை காவல் நிலையத்தில்

    தென்கரை காவல் நிலையத்தில்

    கைது செய்யப்பட்ட புல்லட் நாகராஜனை போலீஸார் தற்போது பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். அவருக்கு என்னென்ன குற்றச் செயல்களில் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

    English summary
    Police squad used mild physical force to arrest Bullet Nagarajan in Periyakulam today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X