For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. மாணவர்கள் மீது தடியடி.. பரபரப்பு!!

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் தேர்வுக்கட்டணம் உயர்த்தியதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Google Oneindia Tamil News

நெல்லை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் தேர்வுக்கட்டணம் உயர்த்தியதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நெல்லை மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்டு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமாரியில் சுமார் 169 கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது.

இந்த கல்லூரிகளில் ஆங்கிலம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் தேர்வு எழுதலாம் என்று இருந்த நடைமுறையை மாற்றி தமிழில் தேர்வு எழுத தடை விதித்து அறிவித்திருந்தது.

மாணவர்கள் எதிர்ப்பு

மாணவர்கள் எதிர்ப்பு

தேர்வுக் கட்டணங்களையும் பல்கலைக்கழகம் உயர்த்தி அறிவித்திருந்தது. இதற்கு 3 மாவட்டங்களை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

மாணவர்கள் எதிர்ப்பு

மாணவர்கள் எதிர்ப்பு

தேர்வுக் கட்டணங்களையும் பல்கலைக்கழகம் உயர்த்தி அறிவித்திருந்தது. இதற்கு 3 மாவட்டங்களை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

மேலும் இது சம்பந்தமாக கடந்த மாதம் மாணவர்கள், பல்கலைக்கழகம் நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியது.

தள்ளுமுள்ளு தடியடி

தள்ளுமுள்ளு தடியடி

தகவலறிந்து வந்த காவல்துறையினர் ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்த முயன்றனர். மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
Police used Latti charge on Nellai Manonmaniyam Sundaranar university students for protesting against university.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X