For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னைவாசிகளே, 108 ஆம்புலன்ஸை செல்போனில் தொடர்பு கொள்ளமுடியலையா?: போலீஸ் இருக்கே

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னையில் வசிக்கும் மக்கள் 108 ஆம்புலன்ஸை செல்போன் மூலம் அழைக்க முடியாததால் அவர்களின் உதவிக்கு போலீசார் வந்துள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னையில் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் இல்லை, தொலைத் தொடர்பு சேவையும் இல்லை. மின்சாரம் இல்லாததால் செல்போன்களை சார்ஜ் செய்ய முடியாமல் அவை சுவிட்ச் ஆப் ஆகியுள்ளன.

Policemen turn people's true friend at this time of crisis

செல்போன்கள் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளதாலும், சார்ஜ் இருந்தாலும் தொலைத் தொடர்பு சேவை இல்லாததாலும் மக்களால் அவசரத்திற்கு 108 ஆம்புலன்ஸை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அழைக்க முடியவில்லை. இந்நிலையில் தான் மக்களுக்கு உதவ போலீசார் முன்வந்துள்ளனர்.

108 ஆம்புலன்ஸை அழைக்க விரும்புபவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று தகவல் சொல்லவும். உடனே போலீசார் தங்களின் வயர்லஸ் போன் மூலம் ஆம்புலன்ஸுக்கு போன் செய்து உங்கள் வீட்டிற்கு வாகனத்தை வருமாறு கூறுவார்கள்.

இந்த இக்கட்டான நேரத்தில் போலீசாரின் இந்த உதவி மக்களுக்கு பேருதவியாக அமைந்துள்ளது.

English summary
People of Chennai can go to the nearest police station and ask them to call 108 ambulance as mobile connectivity is very bad. Police will call ambulance via wireless.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X