For Daily Alerts
இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: தமிழகம் முழுவதும் 70 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க திட்டம்
சென்னை: இன்று தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டாவது கட்டமாக நடைபெறும் இந்த முகாமில் இன்று காலை 7 மணி முகல் 5 மணி வரை நடைபெறுகிறது. சென்னையில் 1,640 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகம் முழுவதும் 43 ஆயிரம் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர்த்து நடமாடும் குழுக்களும் ,பேருந்து நிலையங்கள், விமான நிலையம் அருகில் சோதனை சாவடிகள் என ஆங்காங்கே 1,652 மையங்கள் உள்ளன.
தமிழகம் முழுவதும் 2 லட்சம் பணியாளர்களை கொண்டு 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் வழங்கப்படவுள்ளது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த முகாமில் மருந்து கொடுக்கப்படும்.