For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி என அறிவித்ததால் விஜயகாந்தை ஓரம்கட்டினரா அரசியல் தலைவர்கள்?

விஜயகாந்தை அரசியல் தலைவர்கள் யாரும் சந்தித்து நலம் விசாரிக்காதற்கு அவர் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி என்று அறிவித்ததுதான் காரணமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    விஜயகாந்தை ஓரம்கட்டினரா அரசியல் தலைவர்கள்?- வீடியோ

    சென்னை: விஜயகாந்தை அரசியல் தலைவர்கள் யாரும் சந்தித்து நலம் விசாரிக்காதற்கு அவர் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி என்று அறிவித்ததுதான் காரணமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    தேமுதிக தலைவரும் தமிழக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில மாதங்களாக உடல்நலன் குன்றியுள்ளார்.

    முதலில் சிங்கப்பூர் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்ட் விஜயகாந்த், இம்முறை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.

    மீண்டும் உடல்நலக்குறைவு

    மீண்டும் உடல்நலக்குறைவு

    சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார் விஜயகாந்த். இதைத்தொடர்ந்து சென்னை திரும்பிய அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    டயாலிஸிஸ் சிகிச்சை

    டயாலிஸிஸ் சிகிச்சை

    இதையடுத்து மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விஜயகாந்த். அங்கு அவருக்கு டயாலிஸிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியானது.

    பரவிய வதந்திகள்

    பரவிய வதந்திகள்

    சிகிச்சைக்கு பின்னர் 2 நாட்களில் வீடு திரும்பினார் விஜயகாந்த். ஆனால் அரசியல் கட்சித் தலைவர்கள் யாரும் இதுவரை அவரை சந்தித்து நலம் விசாரிக்கவில்லை.

    தா பாண்டியன்

    தா பாண்டியன்

    அதற்கு பின்னராவது அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்திருக்கலாம். தா.பாண்டியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, முதல்வர் உட்பட அனைத்துக்கட்சி தலைவர்களும் வரிசைகட்டி நின்று அவரை சந்தித்தனர்.

    இதுக்காவது சந்தித்திருக்கலாம்

    இதுக்காவது சந்தித்திருக்கலாம்

    தமிழகத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், தமிழகத்தை யார் ஆளாலாம் என்பதை முடிவு செய்யும் இடத்தில் இருந்தவர் என்ற காரணத்திற்காகவாது விஜயகாந்தை அரசியல் கட்சியினர் நேரில் சந்தித்து விசாரித்திருக்கலாம்.

    தனித்து போட்டி

    தனித்து போட்டி

    விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்து திரும்பிய கையோடு வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தேமுதிக தனித்து போட்டி என அறிவித்தார்.

    ஓரம்கட்டி விட்டனரா?

    ஓரம்கட்டி விட்டனரா?

    ஒருவேலை இதனை மனதில் வைத்துதான் அரசியல் கட்சிகள் இனி விஜயகாந்தை சந்தித்து என்னவாக போகிறது என ஓரம்கட்டி விட்டனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே ஒருவரை சாரும் நிலையில் தான் தமிழக அரசியல் நாகரிகம் உள்ளதா என்ற சந்தேகம் எழுவதை மறுப்பதற்கில்லை..

    English summary
    Political leaders did not meet Vijayakanth after he back from hospital. Vijayakanth annouced no alliance with any party in Parliment election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X