For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எச். ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி சென்னையில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

பெரியார் சிலை உடைக்கப்படும் என்று எச் ராஜா வெளியிட்ட கருத்தை கண்டித்து சென்னை அண்ணா சாலையில் அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    பெரியார் சிலை பதிவு விவகாரம்...எச்.ராஜாவுக்கு எதிராக போராட்டம்- வீடியோ

    சென்னை: பெரியார் சிலை உடைக்கப்படும் என்று எச் ராஜா வெளியிட்ட கருத்தை கண்டித்து சென்னை அண்ணா சாலையில் அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல் தமிழகத்திலும் ஒரு நாள் பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என்று எச் ராஜா தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு நிலவியது.

    எச் ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    ராஜா வருத்தம் தெரிவித்தார்

    ராஜா வருத்தம் தெரிவித்தார்

    இந்நிலையில் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் எச் ராஜா பெரியார் சிலை உடைப்பு குறித்து தான் கருத்து கூறவில்லை என்றும் அது தன் அனுமதியின்றி தனது அட்மின் பதிவு செய்தார் என்று தெரிவித்த ராஜா, அதற்காக வருத்தம் தெரிவித்தார்.

    அரசியல் கட்சிகள் போராட்டம்

    அரசியல் கட்சிகள் போராட்டம்

    தமிழகம் முழுவதும் எச் ராஜாவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அண்ணா சாலையில் சிம்சன் பெரியார் சிலைக்கு முன்பே திமுக, திக, தமிழக வாழ்வுரிமை கட்சியினர், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் சுப வீரபாண்டியன், வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    உருவபொம்மை எரிப்பு

    உருவபொம்மை எரிப்பு

    எச் ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று கோரி அவரது உருவ பொம்மையை கட்சியினர் எரித்தனர். மேலும் எச் ராஜாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கோரி கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியும் அவர்கள் கலையாததால் போலீஸார் கைது செய்தனர்.

    திகவினர் கைது

    திகவினர் கைது

    மதுரையில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட திராவிடர் விடுதலை கழகத்தினரும் மாணவர் அமைப்பினரும் முயற்சி செய்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து செல்லாததால் போலீஸார் கைது செய்தனர்.

    English summary
    Political parties like DMK, DK, MDMK, Marxist Tamilaga Vazhvurimai party protest against H Raja.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X