For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவேரி கரையில் பிறந்த கலைஞர் காவேரி மருத்துவமனையில் காலனோடு போராடுகிறார்.. நாஞ்சில் சம்பத் உருக்கம்

திமுக தலைவர் கருணாநிதி மேலும் பல ஆண்டுகள் உடல் நலத்துடன் வாழ வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    காவேரி கரையில் பிறந்த கலைஞர் காவேரி மருத்துவமனையில் காலனோடு போராடுகிறார்

    சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மேலும் பல ஆண்டுகள் உடல் நலத்துடன் வாழ வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பருதாகவும், 24 மணி நேரத்திற்கு பிறகே அவரது உடல்நிலை குறித்து கணிக்க முடியும் என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

    காவேரி மருத்துவமனை வெளியிட்ட இந்த ஆறாவது அறிக்கை திமுக தொண்டர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சித் தலைவர்களிடையேயும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    விஜயதாரணி

    விஜயதாரணி

    இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி ஓன் இந்தியா தமிழ் தளத்துக்கு அளித்த தொலைபேசி பேட்டியில் கருணாநிதி மேலும் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது13 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் 5 முறை முதல்வராக தமிழகத்தை வழி நடத்தியவர், தமிழ் மீது பற்று கொண்டவர் கருணாநிதி. இளைஞர்களின் வழிகாட்டியாகவும் இருப்பவர். தமிழகத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தவர். திமு கழகத்தை வளர்த்தெடுத்தவர். மேலும் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என தெரிவித்தார்.

    காதர் மொய்தீன்

    காதர் மொய்தீன்

    இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கூறியதாவது, திமுக தலைவர் கருணாநிதியின் வாழ்க்கையில் ஏற்றதாழ்வு என்பது பிரிக்க முடியாத ஒரு அம்சம். அந்த அம்சம் அவரது உடல்நிலையிலும் ஏற்பட்டிருப்பது. பல பின்னடைவுகளில் மீண்டு வந்திருக்கிறார். அதேபோல் கருணாநிதி அதிசயதக்க முறையில் மீள்வார், உடல் நலம் பெறுவார். எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு உதவி புரிவான் என தெரிவித்தார்.

    நாஞ்சில் சம்பத்

    நாஞ்சில் சம்பத்

    காவேரி கரையில் பிறந்த கலைஞர் காவேரி மருத்துவமனையில் காலனோடு பேராட்டத்தை நிகழ்த்திக்கொடிருக்கிறார். தனது பொதுவாழ்வில் எல்லா போராட்டங்களிலும் வெற்றி பெற்ற கருணாநிதி இந்த போராட்டத்திலும் வெற்றி பெற்று வாகை சூடுவார் என நம்பும் லட்சக்கணக்கான தொண்டர்களில் நானும் ஒருவன். இருண்டு கிடக்கும் இதய விளக்குகள் ஒளிர்வதற்காகவும் பச்சையம் இழந்த தாவரங்கள் ஒளிச்சேர்கை செய்வதற்காகவும் இமை மூடாமல் இயங்கிய தலைவன் அசைவற்று படுத்துக்கிடக்கிறான் என்ற செய்தி அதிர்ச்சியை துயரத்தையும் தருகிறது.

    நாஞ்சில் சம்பத் உருக்கம்

    நாஞ்சில் சம்பத் உருக்கம்

    10 நாள் சிகிச்சையில் நலிவு நீங்கி மீண்டு வருகிறார் என்ற செய்தி வந்து கொண்டிருக்கும் வேளையில் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது, முக்கிய உறுப்புகள் இயங்க மறுக்கிறது என்ற செய்தி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பொது வாழ்வில் 1000 பிறை கண்ட கருணாநிதிதான் என்னை தமிழகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார். எனக்கு திருமணம் செய்து வைத்தவர் கருணாநிதி. கருணாநிதி மீண்டு வர காலமகளை யாசிக்கிறேன் கண்ணீருடன் என நாஞ்சில் சம்பத் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

    தமிழிசை

    தமிழிசை

    கருணாநிதியின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை கவலை அளிப்பதாக உள்ளது. உறுப்புகளை செயல்பட வைப்பதே பெரும் சவாலாக உள்ளது என்பது வேதனையாக உள்ளது. மருத்துவ அறிக்கை நம்பிக்கை தருவதாக இல்லை. பல சவால்களை சந்தித்து மீண்டு வந்த கருணாநிதி இந்த சவாலையும் மீண்டு வருவார் என தெரிவித்தார்.

    English summary
    Politicians sharing their wishes about Karunanidhi's health. Kauveri hospital says Setback in Karunanidhi's health.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X