For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண்களை இழிவுபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.. எஸ்.வி சேகருக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதில்

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் யார் பேசினாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று எஸ்.வி சேகர் கருத்திற்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    பெண் பத்திரிகையாளர்களை பற்றி கேவலாமாகப் பேசிய எஸ்.வி சேகர்- வீடியோ

    சென்னை: பெண்களை இழிவுபடுத்தும் வகையில் யார் பேசினாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று எஸ்.வி சேகர் கருத்திற்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார்.

    பல்கலைக்கழகங்களை விட மீடியாக்களில் தான் பாலியல் சம்பவங்கள் அதிகம் அரங்கேறுவதாக திருமலை என்பவர் பதிவிட்ட கருத்தை பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதோடு பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து மிகவும் இழிவாக பேசி இருந்தார்.

    Pon Radhakrishnan replies to S.Ve.Shekher comment on journos

    இதுகுறித்த கேள்விக்கு தற்போது பாஜக கட்சியை சேர்ந்த எம்.பி பொன்.ராதாகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார். அதில் ''பெண்களை இழிவுபடுத்தும் வகையில் யார் பேசினாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.பெண்களுக்கு எதிரான செயல்பாடுகளை சகித்துக் கொண்டு இருக்க மாட்டோம்.'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

    ஏற்கனேவே இவரின் கருத்திற்கு தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். இதையடுத்து எஸ்.வி சேகர் தன்னுடைய கருத்திற்கு மன்னிப்பு கேட்டு இருந்தார்.

    மேலும் தமிழக ஆளுநர் குறித்தும் பேசினார். அதில் ''ஆளுநரை குற்றவாளியாக்க தமிழகத்தில் சதி நடக்கிறது. ஆளுநர் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். தேவையில்லாமல் நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மீது குற்றச்சாட்டு வைக்கிறார்கள்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

    English summary
    Pon Radhakrishnan replies to S.Ve.Shekher comment on journos. He says, no one should speak against women. He also condemned the speech against the governor.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X