For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொலை முயற்சி வழக்கில் புதுச்சேரி பெண் தாதா எழிலரசி விடுதலை! 'சபதம்' பீதியில் எதிராளிகள்

சாராய வியாபாரி ராமுவின் மனைவியை கொலை செய்ய முயன்ற வழக்கில் பெண் தாதா எழிலரசி விடுதலை செய்யப்பட்டுள்ளார்

By Dakshinamurthy
Google Oneindia Tamil News

Recommended Video

    கணவரை கொன்ற சக்களத்தியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய பெண்- வீடியோ

    காரைக்கால்: சாராய வியாபாரி ராமுவின் முதல் மனைவி வினோதாவை 2011ம் ஆண்டு கொலை செய்ய முயன்றதாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து எழிலரசியை விடுதலை செய்து காரைக்கால் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    போதிய சாட்சியமும், ஆதாரங்களும் இல்லாததால் இந்த வழக்கிலிருந்து அவர் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். சினிமா பாணியில் பல தொடர் கொலைகளை தனி ஆளாக நின்று பிளான் போட்டு செய்தவர் எழிலரசி என்றும், அவரின் பின்னால் பல ரவுடிகள் உள்ளதாகவும் புதுச்சேரி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    கணவனுடன் வாழ்ந்து வந்த பெண் தற்போது பெண் தாதாவாகி புதுச்சேரி மாநிலத்தையே கலக்கி வருவதாகவும், அவரின் ரத்த சரித்திரத்திற்கு பின்னால் பல துரோகங்களும், வலியும் இருப்பதாக கூறுகிறார்கள் எழிலரசிக்கு ஆதரவாளர்கள்.

     காரைக்கால் சாராய வியாபாரி

    காரைக்கால் சாராய வியாபாரி

    காரைக்கால் சாராய வியாபாரியான ராமுவுக்கு வினோதா, எழிலரசி என இரண்டு மனைவிகள். ஒரு கட்டத்தில் வினோதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரை பிரிந்த ராமு எழிலரசியுடன் மட்டுமே வசித்து வந்தார். அதையடுத்து ராமு, எழிலரசி இருவரையும் கொலை செய்ய கூலிப்படையை அனுப்பினார் வினோதா.

     காயங்களுடன் தப்பிய எழிலரசி

    காயங்களுடன் தப்பிய எழிலரசி

    வினோதா அனுப்பிய கூலிப்படையினர் நடத்தி தாக்குதலில் ராமு கொலை செய்யப்பட எழிலரசி பலத்த காயங்களுடன் தப்பினார். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இந்த கொலை பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தன் கணவரின் கொலைக்குக் காரணமான அனைவரையும் பழிக்குப் பழி வாங்குவேன் என்று சபதம் எடுத்தார் எழிலரசி.

     சபத்தை நிறைவேற்றினார் எழிலரசி

    சபத்தை நிறைவேற்றினார் எழிலரசி

    ராமுவின் முதல் மனைவி வினோதாவை கூலிப்படையை ஏவி கொலை செய்தார் எழிலரசி என கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து தனது கணவர் ராமுவின் கொலைக்கு காரணமாக இருந்த பலரையும் ஆதாரங்கள் இல்லாமல் எழிலரசி கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெண் தாதாவாக உருவெடுத்தார் எழிலரசி

     பெண் தாதா எழிலரசி

    பெண் தாதா எழிலரசி

    தொடர் கொலைகள் மூலமாக புதுச்சேரியில் பெண் தாதாவாக உருவெடுத்தார் எழிலரசி, அரசியல் பலம், ரவுடிகள் பலம் என்று அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தார் எழிலரசி. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் புதுச்சேரி முன்னாள் முன்னாள் சபாநாயகர் சிவகுமார் அரிவாளால் வெட்டியும் வெடிகுண்டு வீசியும் கொலை செய்யப்பட்டார்.

     தலைமறைவானார் எழிலரசி

    தலைமறைவானார் எழிலரசி

    சிவகுமார் கொலை தொடர்பாக தீவிரமாக தேடப்பட்டு வந்த எழிலரசி அடுத்த சிலநாட்களிலே புதுச்சேரி நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனைத்தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட அவர் பல மாதங்கள் கழித்து ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவானார். இதனைத்தொடர்ந்து சமீபத்தில் சொகுசு விடுதி ஒன்றில் தனது கூட்டாளிகளுடன் எழிலரசி சதித்திட்டம் தீட்டும் போது போலீசார் அவரை கைது செய்தனர்.

     சொத்துக்கள் முடக்கம்

    சொத்துக்கள் முடக்கம்

    மீண்டும் புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள எழிலரசி மீதான கொலை முயற்சி வழக்கு, காரைக்காலில் நடைபெற்று வந்தது. சிறையில் அவர் சதித்திட்டம் ஏதும் தீட்டுகிறாரா என்றும் போலீசார் அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரி எஸ்.எஸ்.பி ராஜீவ்ரஞ்சன் ரவுடிகளை கட்டுப்படுத்துவதற்காக அவர்களது சொத்துகளை முடக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அவ்வரிசையில் விரைவில் எழிலரசியின் சொத்துகளையும், வங்கி கணக்கையும் முடக்கும் பணி நடைபெறுவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

     சபதம் தொடருமா..?

    சபதம் தொடருமா..?

    இந்நிலையில் கணவர் ராமுவின் முதல் மனைவியை வினோதாவை 2011ம் ஆண்டு கொலை செய்ய முயன்றதாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து எழிலரசியை விடுதலை செய்து காரைக்கால் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதிய சாட்சியமும், ஆதாரங்களும் இல்லாததால் இந்த வழக்கிலிருந்து அவர் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். தற்போது விடுதலையாகும் எழிலரசி மீண்டும் தன்னுடைய சபதத்தை தொடர்வாரா, அல்லது முடக்கம் செய்வதிலிருந்து தன்னுடைய சொத்துகளை காப்பாற்றுவாரா என்பது தெரியவில்லை.

    English summary
    Pondicherry Don Ezhilarasi Released from Murder attempt case. A Case has been filed on her as she tried to kill his husbands first wife at the year 2011. But judges released her from the case stating that evidence are not clear.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X