For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாயமங்கலம் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா இன்று துவக்கம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

தாயமங்கலம் மாரியம்மன் கோயிலில் பங்குனிவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

Google Oneindia Tamil News

சிவகங்கை: தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் இன்று பங்குனி பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேர்த்திக்கடனை செலுத்த ஏராளமான பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டத்தில் அமைந்துள்ளது, தாயமங்கலம். இந்தக் கிராமத்தில், பிரசித்திபெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. தென்மாவட்ட மக்கள் வழிபடும் சக்திவாய்ந்த அம்மனாகத் திகழ்கிறது. பங்குனி மாதம் நடைபெறும் திருவிழாவுக்குக் கூடும் பக்தர்கள் மட்டும் குறைந்தது 10 லட்சத்தைத் தாண்டும்.

Pongal Festival celebrats near Thayamangalam

அதன்படி, இந்த ஆண்டிற்கான பங்குனி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தினமும் ஏராளமான பக்தர்கள் தாயமங்கலத்துக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்,.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், தாயமங்கலம் மாரியம்மனுக்கு ஆடு, கோழிகளை பலிகொடுத்து பொங்கல் வைத்து படைத்து வேண்டுதலை நிறைவேற்ற, குவிந்தவண்ணம் உள்ளனர்.

இதற்காக தாயமங்கலம் மாரியம்மன் கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் ஆடு, கோழிகளுடன் லாரி, கார், வேன்களில் வந்தபடியே உள்ளனர்.

இவர்கள் கோயிலை சுற்றியுள்ள மரங்கள், தங்குமிடங்கள், கட்டிடங்கள் போன்றவற்றில் தங்கியுள்ளனர், சமையல் செய்து அம்மனுக்கு வேண்டுதல்களை நிறைவேற்ற உள்ளதால் அதற்கான பணிகளுக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

English summary
Pongal Festival is celebrated in Sri Muthuramyamman temple near Thayamangalam in Sivagangai District. There are many devotees in the temple to pay their attention.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X