For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

களைகட்டிய தமிழர் திருநாள் - காரைக்குடி பள்ளியில் பொங்கல் வைத்த வெளிநாட்டினர்

தமிழர் திருநாளாம் பொங்கல் விழா காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் ரோட்டரி கிளப் ஆப் காரைக்குடி, பேர்ல்சங்கமம்மற்றும் பள்ளியின் இன்ட்ராக்ட் சங்கம் சார்பில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா 11.01.2018 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தேவகோட்டைமாவட்டக் கல்வி அலுவலர் திரு. அ. மாரிமுத்து அவர்கள் தலைமமையேற்றார். சேவுகன் அண்ணாமலை கல்லூரியின் துணை முதல்வர் கேப்டன் டி எ விஜயன் அவர்கள்முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் திரு.ஆ.பீட்டர் ராஜாஅவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

ரோட்டரி கிளப் ஆப் காரைக்குடி, பேர்ல்சங்கமம்தலைவர் திரு. நாச்சியப்பன் அவர்கள், செயலர் நாவுக்கரசுஅவர்கள்மற்றும்ஓய்வு பெற்ற ஆசிரியர் புலவர்திரு. நாகப்பன் அவர்கள்வாழ்த்துரைவழங்கினார்கள்.

ரோட்டரி சங்க உறுப்பினர்கள், மற்றும், பள்ளிமேலாண்மைக்குழுதலைவர் திருமதி. அழகுசுந்தரி அவர்கள் ஆகியோரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

விருந்தினர்களுக்கு மரியாதை

விருந்தினர்களுக்கு மரியாதை

பொங்கல்விழாவிற்கு வந்த சிறப்பு விருந்தினர்கள்மற்றும் பிரான்ஸ் நாட்டினருக்கும் பரிவட்டம் கட்டியும் கும்ப மரியாதை செய்யப்பட்டது.

பொங்கல் விழா

பொங்கல் விழா

முளைப்பாரி எடுத்தும், கரகாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், புலியாட்டம், காவடியாட்டம் போன்ற ஆட்டங்கள் மூலமும், தமிழ் பாரம்பரிய முறையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் பொங்கல் வைக்கப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.

பாரம்பரிய கலைகள்

பாரம்பரிய கலைகள்

சிறப்பு விருந்தினர் தேவகோட்டைமாவட்டக் கல்வி அலுவலர் திரு. அ. மாரிமுத்து அவர்கள் பேசுகையில், மாணவர்கள் மதச் சார்பின்றி ஒற்றுமையுடன் இருக்கவேண்டும் எனவும், தமிழ் கலாச்சாரம், பண்பாடு மற்றும் பாரம்பரிய கலைகளை பாதுகாத்து வளர்க்கவேண்டும் என்றும் கூறினார்.

பள்ளிகளில் பொங்கல்

பள்ளிகளில் பொங்கல்

இவ்விழாவில்7ம் வகுப்பு மாணவர்களின் அரட்டை அரங்கம், தமிழ் திருநாளை பற்றிய பேச்சு, தமிழ்கலாச்சாரப் பாடல் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தது. இப்பொங்கல் விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு தவளை ஓட்டம், சாக்கோட்டம், லெமன் அண்ட் ஸ்பூன், பலூன் உடைத்தல், நீர் நிரப்புதல், உரி அடித்தல், கண் கட்டி யானைக்கு வால் வரைதல் போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

பிரான்ஸ் நாட்டு விருந்தினர்

பிரான்ஸ் நாட்டு விருந்தினர்

ஆசிரியர்கள் கயிறு இழுத்தும், கும்மி அடித்தும் பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண்டாடினார்கள். இவ்விழாவிற்கு வந்திருந்த பிரான்ஸ் நாட்டினர், பள்ளிமாணவர்களுடன் பொங்கல் வைத்தும், மாணவர்களுடைய கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தும், உற்சாகமாகக் கொண்டாடினர்.

பெற்றோர்கள் உற்சாகம்

பெற்றோர்கள் உற்சாகம்

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இவ்விழாவிற்கு, பட்டு உடுத்தி வந்தது தமிழ் கலாச்சாரத்தை வளர்க்கும்விதத்தில் அமைந்தது.பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இந்நிகழ்வை மகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர்.

தமிழர் திருவிழா

தமிழர் திருவிழா

இந்நிகழ்ச்சியின் முடிவில் இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளிஇன்ட்ராக்ட் சங்கத் தலைவர் செல்வன். ஆரோக்கிய கிறிஸ்டோபர் நன்றி கூறினார். தலைமையாசிரியர் மற்றும்பட்டதாரி ஆசிரியர்கள் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள்.

English summary
Pongal festival was celebrated in Ramanathan chettiyar Municipal high school in Karaikudi on 11th January 2018. Students participated in various contests and won prizes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X