For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொங்கல் வருது.. பானை தயாரிப்பு படு ஜரூர்.. கரூரில்!

Google Oneindia Tamil News

கரூர்: கரூரைச் சுற்றியுள்ள பகுதியில் பொங்கல் பண்டிக்கைக்காக மண்பானை தயாரிக்கும் பணிகள் விறுவிருப்படைந்துள்ளன.

தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை, முதல் நாள் சூரியன் பொங்கலாகவும் இரண்டாம் நாள் மாட்டு பொங்கலாகவும், மூன்றாம் நாள் காணும் பொங்கலாகவும் கொண்டாடப்படுகிறது. வுடகிழக்கு பருமழையை அடிப்படையாக வைத்து பயிரிடப்படும் நெல் உள்ளிட்ட தானியங்கள், தை மாத அறுவடை செய்யப்படுவதால் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

Pongal pot making is getting speed in Karur

பொங்கல் பானை செய்யும் குயவர்கள், தற்போது தீவிரமாக பானைகளை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த காலத்தில் சிலர் பாரம்பரியமாக மண் பானை தயாரிப்பு வேலைகளை செய்து கொண்டுதான் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் மண்பானையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என பாரம்பரியமாக பின்பற்றி வருகிறோம்.

கரூர் மாவட்டத்தில் வேலாயுதம்பாளைம், நெய்யல், வெள்ளியனை, லாலாப்பேட்டை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் மண்பானை தயாரிப்பு பணிகள் நடக்கிறது.

30 முதல் 300ரூபாய் வரை, பானை விற்பனை செய்யப்படுகிறது. நடப்பாண்டு பருவமழை ஓரளவு பெய்ததால் பரவலாக நெல் சாகுபடி அதிகளவில் நடந்துள்ளது. அதனால் பொங்கலுக்கான பானை தயாரிக்கும் பணி ஜரூராக நடக்கிறது.

இது குறித்து மண்பானை தொழிலாளர்கள் கூறியதாவது:- பொங்கல் பானை வாங்குவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வந்தாலும் சில குடும்பங்களில் பாரம்பரிய முறையில் தான் தயாரிக்கப்பட்ட உணவு தான் சிறந்தது என்று மருத்துவர்களும் கூறி வருகின்றனர். நாகரிக மோகத்தால் சிலர் குக்கர், சில்வர் பானைகளில் பொங்கல் வைக்கின்றனர். அவை சரியானது அல்ல.

இந்தாண்டு தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளதால் கடந்தாண்டை காட்டிலும் நடப்பாண்டு நெல் சாகுபடி பரப்பு அதிகமாகி உள்ளது. அதனால் வியாபாரிகளிடம் இருந்து பொங்கல் பானைக்கான ஆர்டர் வரத் துவங்கியுள்ளது என்றார்கள் மகிழ்ச்சியாக.

English summary
In Karur district the pongal pot making process is vigorous as only few days are remaining for pongal festival.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X