For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாற்றுத்திறனாளிகளை இழிவாக பேசிய விவகாரம் ... நடிகர் ராதாரவி மீது போலீசில் புகார்

மாற்றுத் திறனாளிகளை இழிவுபடுத்தும் விதமாக பேசியும், நடித்தும் காண்பித்த நடிகர் ராதாரவி மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் தமிழ்நாடு பால் முகர்வர்கள் தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்னுசாமி புக

By Vazhmuni
Google Oneindia Tamil News

சென்னை : மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் விதமாக பேசியும், நடித்தும் காண்பித்த திமுகவைச் சேர்ந்த நடிகர் ராதாரவி மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் தமிழ்நாடு பால் முகர்வர்கள் தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்னுசாமி புகார் அளித்துள்ளார்.

கடந்த வாரம் வடசென்னை, தங்கசாலை மணிக்கூண்டு அருகே நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய நடிகர் ராதாரவி மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் விதமாக பேசியும், நடித்தும் காண்பித்தார்.

 Ponnusamy filed complaint against Radharavi

இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தனர். மேலும் இது குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் விளக்கம் அளித்திருந்தார். இதனையடுத்து ராதாரவி மன்னிப்பு கோரினார்.

இந்நிலையில் நடிகர் ராதாரவி மீது இந்திய தண்டனைச் சட்டம் - 1882ன் படி 268, 294, 499, 500, 506, 511ஆகிய பிரிவுகளின் கீழும், மாற்றுத் திறனாளிகள் சட்டம் 2016, பிரிவு 92ன் கீழும் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இன்று சென்னை காவல் துறை ஆணையரை பொன்னுசாமி சந்தித்து புகார் மனு அளித்தார்.

நடிகர் ராதாரவியை கைது செய்து சிறையில் அடைப்பதற்கு பதிலாக ஏதேனும் ஒரு மாற்றுத் திறனாளிகள் இல்லத்தில் ஒரு ஆண்டிற்கு தங்கியிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டாயமாக சேவை செய்ய உத்தரவிட வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

English summary
Tamil Nadu Milk Dealers Employees Welfare Association president Ponnusamy has filed complaint against Radharavi. In the complaint , radharavi acted like handicapped persons in the dmk meeting held recently in chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X