
‘ஏண்டா என்னை இப்படி தப்பா வீடியோ எடுத்தே’.. டார்ச்சர் தந்தவரை சுற்றி சுற்றி தாக்கிய பெண்கள்
காரைக்குடி: தன்னிடம் வேலை பார்க்கும் இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபட முயன்ற ராஜா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.. அத்துடன், "பெண்களை பாலியல் தொழிலுக்கா அழைக்கிறே? என்று கேட்டு, ராஜா என்பரை பாதிக்கப்பட்ட பெண்கள் சுற்றி நின்று கன்னத்தில் அறையும் வீடியோவும் வைரலாகிவருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலும் திருச்சியிலும் திருமண வரவேற்பு ஏற்பாட்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருபவர் பெயர் ராஜா... அந்த நிறுவனம் பெயர் "கலக்கல் ஈவண்ட் மேனேஜ்மென்ட்".
இந்த நிறுவனத்தின் பணி என்னவென்றால், திருமண வரவேற்பின்போது டான்ஸ் ஆடுவதற்காகவே 30 பெண்களை வேலையில் வைத்துள்ளார்.. ஆனால், அந்த பெண்களை மது குடிக்கவைத்து ஆபாச வீடியோ எடுப்பதாகவும், பிறகு அவர்களை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாகவும் சொல்லப்படுகிறது.
சிறுமி பாலியல் பலாத்கார விவகாரம்.. ராகுல் காந்தியின் சர்ச்சைக்குரிய பதிவை நீக்கிய பேஸ்புக்!

ராஜா
அதுமட்டுமல்ல, அந்த வீடியோக்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு விடுவதாகவும், குடும்பத்தினரிடம் காட்டி விடுவதாகவும் மிரட்டி மிரட்டியே பாலியல் டார்ச்சரும் ராஜா தந்துள்ளதாக தெரிகிறது... இப்படிப்பட்ட சூழ்நிலையில் திடீரென ஒரு விவகாரம் இந்த நிறுவனத்தில் வெடித்துள்ளது.. இவரிடம் பணியாற்றி வரும் தஞ்சையை சேர்ந்த ஒரு பெண்ணிடம் மோசடி செய்துவிட்டாராம் ராஜா.. ரூ.50 ஆயிரம் வரை தருவதாக கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றுள்ளார்.. ஆனால் அந்த பெண் மறுப்பு தெரிவித்தும்கூட ராஜா தொடர்ந்து வற்புறுத்தியபடியே வந்துள்ளதாக தெரிகிறது.

ரிசப்ஷன்
அதனால், அந்த பெண் மனமுடைந்த நடந்த சம்பவம் குறித்து தன்னுடைய நண்பர்களிடம் சொல்லி வேதனைப்பட்டுள்ளார்.. இதனால், அந்த நண்பர்கள், ஒரு கல்யாண ரிசப்ஷன் இருப்பதாக சொல்லி, ராஜாவை காரைக்குடி அருகே உள்ள அமராவதிபுதூருக்கு அழைத்தனல்.. அங்கு வந்த ராஜாவை, வேலை செய்கிற பெண்கள் பாலியல் தொழிலுக்கா கூப்பிடறே? என்று சொல்லி சரமாரியாக சுற்றி வளைத்து அடித்துள்ளனர்.. இந்த வீடியோதான் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ரிசப்ஷன்
அதனால், அந்த பெண் மனமுடைந்த நடந்த சம்பவம் குறித்து தன்னுடைய நண்பர்களிடம் சொல்லி வேதனைப்பட்டுள்ளார்.. இதனால், அந்த நண்பர்கள், ஒரு கல்யாண ரிசப்ஷன் இருப்பதாக சொல்லி, ராஜாவை காரைக்குடி அருகே உள்ள அமராவதிபுதூருக்கு அழைத்தனல்.. அங்கு வந்த ராஜாவை, வேலை செய்கிற பெண்கள் பாலியல் தொழிலுக்கா கூப்பிடறே? என்று சொல்லி சரமாரியாக சுற்றி வளைத்து அடித்துள்ளனர்.. இந்த வீடியோதான் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

புகார்
பெண்களிடம் அடிவாங்கிய ராஜா சாக்கோட்டை ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார்.. அந்த புகாரும் பொய் புகார்.. அதில், தன்னை அடித்து பணம், நகைகளை பறித்து கொண்டதாக சொல்லி உள்ளார்.. ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணோ, மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவுக்கு ஒரு புகார் அளித்து விட்டார். அந்த புகாரில் உள்ள விவரம் இதுதான்..

கும்பகோணம்
"எனக்கும் காரைக்குடியை சேர்ந்த ராஜ்குமாருக்கும் திருமணம் நடந்தது... சென்னையில் வசித்து வந்த நாங்கள், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறோம்... கும்பகோணத்தில் எனது பெற்றோர் வீட்டிற்கு வந்து ஓட்டல் ஒன்றில் கணக்காளராக பணியாற்றினேன். தவிர விசேஷ நிகழ்ச்சிகளில் 'வெல்கம் கேர்ள்ஸ்' ஆகவும் பணியாற்றுகிறேன். கடந்த 2020 ஜனவரியில் புதுவயல் பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் வரவேற்பாளராக பணியாற்றினேன்.

செல்போன்
இந்நிகழ்ச்சி ராஜா ஏற்பாட்டில் நடந்ததை அறிந்தேன். அப்போது, அவர் நிறைய நிகழ்ச்சிக்கு ஆள் தேவை என கூறி எனது செல்போன் எண்ணை பெற்றுக்கொண்டார். மேலும் நிகழ்ச்சியில் சாக்கோட்டை காவல்நிலைய எழுத்தர் மாயவதனை நண்பர் என அறிமுகப்படுத்தினார். அடுத்த 2 நாட்களுக்கு பிறகு என்னை தொடர்பு கொண்ட ராஜா, ''பெரிய வி.ஐ.பி.கள் எல்லாம் இருக்காங்க, எங்களுடன் ஒரு அக்ரிமென்ட் போட்டு 1 அல்லது 2 மாதம் தங்கினால் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்'' என கூறி பாலியல் தொழிலுக்கு அழைத்தார்.

விசாரணை
கடந்த 2021 ஏப்ரல் மாதம் சாக்கோட்டை காவல் நிலைய எழுத்தர் மாயவதன் பேசினார். ராஜா புகார் கொடுத்து இருப்பதால் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு கூறினார். தவிர என்னிடம் அடிக்கடி போன் செய்து தகாத முறையில் பேசினார். ராஜா சொல்வதுபோல் நடக்காவிட்டால் ஆட்களை வைத்து ராஜாவை கடத்தி மிரட்டியதாக வழக்கு போடுவதாக அச்சுறுத்தினார். காவல் துறையில் பணி புரியும் அதிகாரத்தை பயன்படுத்தி மாயவதன், ராஜாவுடன் சேர்ந்து சட்டவிரோத செயல்களை செய்து வருகிறார். இவர்களை கைது செய்து விசாரித்தால் பல உண்மைகள் வெளியே வரும்" என்று தெரிவித்துள்ளார்.

கைது
முதல்வர் தனிப்பிரிவுக்கு அளித்த புகாரின் அடிப்படையில் சாக்கோட்டை ஸ்டேஷனில் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர்... அப்போதும் ராஜா தன்னை நடன நிகழ்ச்சிக்கு அழைத்து, தனது பெண்மையை இழிவுபடுத்தும் விதமாக பேசியதாகவும், முறைகேடான செயல்களுக்கு தூண்டியதாகவும் அந்த பெண் வாக்குமூலம் தந்தார்.. இதனடிப்படையில் ராஜாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்...

கண்ணீர்
இதனிடையே, ராஜாவை அமராவதிபுதூருக்கு அழைத்து வந்து சரமாரி பெண்களும், நண்பர்களும் தாக்கிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவால், பாதிக்கப்பட்ட பெண்கள், ராஜாவை ரவுண்டு கட்டி கன்னத்தில் ஆவேசமாக அறைகிறார்கள்.. குறிப்பாக 3 பெண்கள் வரிசையாக வந்து, என்னை ஏன்டா இப்படி செய்தே.. நான் நல்லாதானே இருந்தேன்.. ஏன்டா தப்பாக வீடியோ எடுத்தே என்று கேட்டு கேட்டு அழுகிறார்.. ஒரு பெண் ஆவேசம் தீர அடித்துவிட்டு கதறி கதறி அழுகிறார்.