For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்டெர்லைட் ஆலைக்கு செல்லும் கரென்ட் கட்... மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி

ஸ்டெர்லைட் ஆலைக்கு செல்லும் மின்சாரத்தை துண்டிக்குமாறு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    கரென்ட் கட் | கடையடைப்பு | எட்டிப்பார்க்காத அமைச்சர்கள்- வீடியோ

    தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு செல்லும் மின்சாரத்தை துண்டிக்குமாறு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டதை அடுத்து அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

    உயிருக்கும், விவசாயத்துக்கும், நீருக்கும் உலை வைக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு தூத்துக்குடி மக்கள் கடந்த 3 மாதங்களாக போராடி வருகின்றனர். இந்நிலையில் அதுகுறித்து மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் இருந்தன.

    Power cut in Sterlite industry from today morning

    இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை 100-ஆவது நாளையொட்டி ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க பொதுமக்கள் பேரணியாக சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸார் அவர்களை சுட்டுக் கொன்றனர்.

    இதில் 13 பேர் உயிரிழந்துவிட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மற்ற மாநில முதல்வர்கள் கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு விஷயம் பூதாகரமாகிவிட்டது.

    தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை நேற்று முதல் மே 27-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு முடக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உத்தரவுப்படி மின்வாரிய ஊழியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இன்று காலை 5 மணிக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தூத்துக்குடி நகரிலும் பல இடங்களில் நேற்று இரவு மின் துண்டிப்பு என தகவல்கள் கூறுகின்றன.

    English summary
    Disconnection of Power supply in Sterlite industry from today morning. It was done by Pollution Control Board.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X