For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நன்றாக வீசும் தென்மேற்கு பருவ காற்று - காற்றாலை மின் உற்பத்தி அபாரம்

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லையில் தென்மேற்கு பருவகாற்று நன்றாக வீசி வருவதால் காற்றாலை மின் உற்பத்தி அபாரமாக உள்ளது.

தமிழகத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காற்றாலைகள் உள்ளன. இதில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தில் மட்டுமே 5 காற்றாலைகள் இருக்கும் என கூறப்படுகிறது.

Power generation using Windmill high in Nellai

இந்திய அளவில் காற்றாலை மின் உற்பத்தியில் பிரதான மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருந்த வருகிறது. கடந்த நான்கு மாதங்களாக வெயில் கொளுத்தியதால் காற்றாலை மின் உற்பத்தி வெகுவாக குறைந்தது. பெரும்பாலான காற்றாலைகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்த காரணத்தால் வெளியிடங்களில் மின் கொள்முதல் செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது. அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்து வருவதால் மின்துறைக்கு அதிக நிதி பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.

இந்தாண்டு கோடை முடிவுக்கு வருவதாலும் அந்தமானில் காற்று வீச தொடங்கியதாலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காற்று வீச தொடங்கியுள்ளது.

குறிப்பாக தமிழக தென் மாவட்டங்களில் காற்று வேகமாக வீசி வருகிறது. இதனால் காற்றாலை மின் உற்பத்தி வேகமெடுத்து வருகிறது. நள்ளிரவு நிலவரப்படி காற்றாலை மி்ன்சாரம் 4130 மெகா வாட் கிடைத்துள்ளது.

English summary
There are nearly 5 windmills in Nellai, Tuticorin, Kanyakumari Districts. South west monsoon Wind blows well, wind mill power generation increases.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X