For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எட்டிப் பார்த்த காற்று... தாராளமாக அள்ளித் தரும் காற்றாலை மின்சாரம் – மகிழ்ச்சியில் மின் வாரியம்

Google Oneindia Tamil News

நெல்லை: கோடை காலம் முடிந்து காற்று எட்டி பார்க்க தொடங்கியுள்ளதால் காறறாலை மின் உற்பத்தி முதல் நாளிலேயே 2 ஆயிரம் மெகா வாட்டை கடந்தது. இதனால் மின் வாரியத்தினர் நிம்மதியில் உள்ளனர்.

தமிழகத்தில் நாள்தோறும் 13,366 மெகா வாட் மின்சாரம் தேவைப்படுகிறது. கடந்த ஆண்டு முதல் கூடங்குளம் முதல் அணு உலை மூலம் 563 மெகா வாட் கிடைக்கிறது.

Power increased by the wind mills in Nellai

அனல், புனல் என பலவேறு வழிகளில் மின் உற்பத்தி நடந்தாலும் பற்றாக்குறை காரணமாக நாள்தோறும் 626 மெகா வாட் மின்சாரம் வெளியிடங்களில் கொள்முதல் செய்யப்படுகிறது.

நெல்லை மண்டலத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காற்றாலைகள் காறறு சீசன் காலத்தில் அதிக அளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. கடந்த சில மாதங்களாக கோடை வெயில் கொளுத்தியதாலும், போதிய காற்று வீசாததாலும் காற்றாலை மின் உற்பத்தி குறிப்பிட்டு சொல்லும்படியாக இல்லை.

சில நாட்களிலேயே அதிக பூஜ்ய நிலைக்கு சென்றது. ஜூன் முதல் வாரத்தில் கேரளத்தில் தெனமேற்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாகதான் அங்கு மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காறறு பலமாக வீச தொடஙகியுள்ளது.

இதனால் காற்றாலைகளும் முழு வீ்ச்சில் சூழல தொடங்கியுள்ளன. கடந்த வாரம் வரை அதிகபட்சமாக 500 மெகா வாட் வரை காற்றாலை மின்சாரம் கிடைத்து வந்தது.

இந்த நிலையில் மாலை முதல் காற்று நன்றாக வீச தொடங்கியுள்ளதால் இரவு நிலவரப்படி 2119 மெகா வாட் மின்சாரம் தனியார் மற்றும் மின்வாரிய காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் பெறப்பட்டது.

காற்று வீச தொடங்கிய முதல் நாளிலேயே மின்சாரம் 2 ஆயிரத்தை கடந்து விட்டதால் மீதம் உள்ள நாட்களில் 5 ஆயிரம் மெகா வாட் வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மின் வாரியத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

English summary
Wind mill energy have been increased a lot in this time of course by the weather change.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X